என் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.
அக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.
வலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)
சுட்டிச் சுட்டித் தம்பிக்கு
சுகைல் குட்டித் தம்பிக்கு
சின்னச் சின்னப் பாட்டுப் பாடவா
அப்ப இப்ப எப்பவும்
தப்புச் செய்யும் தம்பிக்கு
துப்பாக்கித் தேவை இல்லடா
வாப்பா இங்கப்பா
வந்து என்னைப் பாரப்பா
ஏம்பா உனக்கும் வீராப்பா
குட்டி குட்டி அக்காக்கு
ஸ்கூலுக்குப் போவும் அக்காக்கு
விளையாட நேரம் இருக்கா
துப்பாக்கி எனக்கு
வீட்டுப் பாடம் உனக்கு
உக்காந்து பாடம் படிக்கா
வாக்கா எங்கக்கா
வந்து என்னைப் பாரக்கா
ஏங்கா உனக்கும் வீராப்பா
4 comments:
நல்லதொரு ஓசைநயம் மிக்க கவிதைங்க புகாரி.
-சுரேஷ்பாபு
பாடலைப் படிக்கும்போதே ஒரு துள்ளாலான இசையும் மனதில் வந்து ஒட்டிக் கொள்கிறது. அருமை.
த.பிரபு குமரன்
ஆகா ஆகா, அக்கா பாடும் பாட்டு - அருமையான பாட்டு -
மழலைச் சொற்கள் - பொருள் எளிமை - வாழ்த்துகள்
அன்புடன் ..... சீனா
இரண்டு குழந்தைகளும் ரொம்ப க்யூட்....:)
அன்புடன்...
வாணி
Post a Comment