ஜமால் முகமது கல்லூரி பிரியாவிடை


சந்தக் கவிதைகளில்தான் என் பிஞ்சு மனம் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தது அப்போதெல்லாம். பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து சந்தக் கவிதைகள் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னும் ஏதோ கிறுக்கிப் பார்த்த ஞாபகம் மங்கலாய் இருக்கிறது.

நான் முதன் முதலில் எழுதிய புதுக்கவிதை இதுதான் என்று நினைக்கிறேன். இதை ஒரு கவிதையாக நான் எழுதவில்லை. என் புகமுக வகுப்பு நண்பர்களின் ஞாபகத் தாள்களில் எழுதித் தருவதற்காக எழுதினேன். நண்பர்கள்தான் அருமையான கவிதை என்று புகழ்ந்தார்கள். அதனால் இது என் முதல் புதுக்கவிதையாய் ஆனது :) ஜமால் முகமது கல்லூரியிலிருந்து புகுமுகவகுப்பு முடித்து வெளியேறிய மாணவ மனதைப் பாருங்கள்...


பிரியாவிடை

நெஞ்சைப் பிளந்தேன்
நினைவில் புதைத்தேன்
நீலவிழி
நித்திரையில்
நீ வருவாய்
நான் மலர்வேன்

இனியுன்
நெருப்புச் சிவப்பு விழி
நீர் துடைத்து
நீ நடப்பாய்
நண்பா

5 comments:

cheena (சீனா) said...

ஆறாம் வகுப்பினிலே சந்தக் கவிதை - புகுமுக வகுப்பினிலேயோ புதுக் கவிதை உதயம். பிறவிக் கவிஞனையா நீர். பிரியா விடை எனது நினைவுப் புத்தகங்களை புரட்டச் செய்தது. புகுமுக வகுப்பில் விடை பெறும் போது பெற்ற, கொடுத்த கவிதைகள், வரிகள், நெகிழ்வு, நட்பின் ஆழம், நினைத்ததை எல்லாம் எழுத முடியாமல் ரத்தின்ச் சுருக்கமாக கிறுக்கியது, இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தேடிப் பிடித்து படித்து மகிழ்ந்தது ...............

cheena (சீனா) said...

படித்ததில் பிடித்தது :

" தேர்வு முடிந்த கடைசி நாளில்
நினைவேட்டில் கையொப்பம் வாங்குகிற
எவருக்கும் தெரிவதில்லை
அது ஒரு
நட்பு முறிவிற்கான
சம்மத உடன்படிக்கை என்று. "

எப்படி ? உண்மைதானே - புகுமுக வகுப்பின் நண்பர்களில் ஒருவர் கூட இப்போது தொடர்பில் இல்லை.

Unknown said...

புகுமுக வகுப்பு நண்பர்களுள் ஒருவர் மட்டும் என்னை ஒரு மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டார். திண்ணையில் சந்தக்கவிதை வாசித்தாராம். புகாரி என்றும் இருந்ததாம். சந்தமென்றால் அது நம்ம புகாரியாகத்தான் இருக்கமுடியும் என்று முடிவே செய்து மடல் இட்டாராம். எத்தனை ஆனந்தம் தெரியுமா?

இணையம் இணைக்கும்!

இப்படியே என் பள்ளி ஆசிரியரையும் இணையத்தில் சந்தித்தேன். ஒரத்தநாடு பற்றி நான் எழுதிய வரிகளை வாசித்துவிட்டு அவர் என்னுடன் தொடர்பு கொண்டார்.

என் நண்பரின் கல்லூரி நண்பரும் இப்படியே திண்ணைவழியே கண்டு மடலிட்டார்.

ஒருவர் துபாய், ஒருவர் இந்தியா, ஒருவர் அமெரிக்கா நான் கனடாவில் :)

Furkan MIM said...

மிகவும் நன்று

Furkan MIM said...

மிகவும் நன்று