உறுதியெடுப்போம்
அன்பே

வன்முறையற்றப்
பொன்னுலகையே
வரமாகக் கொள்வோம்
அன்பே

கைகட்டித் தவமிருக்காமல்
கண்டநொடியில்
வன்முறை தடுப்போம்
அன்பே

வேற்றுமைகளின் கரம்பற்றி
உறவு வளர்ப்போம்
அன்பே

சகிப்பின் உயர்வில்
சமரச வாழ்வு பெறுவோம்
அன்பே

அசைக்கவியலா
நல்லறிவு கொண்டு
அத்துமீறல்களைத்
தட்டிமுறிப்போம்
அன்பே

அறம்கொண்ட
அன்பறிவுக்குமுன்
அணுகுண்டும்
வெங்காயவெடிதான்
அன்பே

வன்முறையற்றப்
பொன்னுலகையே
வரமாகக் கொள்வோம்
அன்பே

அன்புடன் புகாரி

No comments: