சின்னச் சின்ன எண்ணங்கள்


*கடுஞ்சினம் பெரும் அறிவோடு வெளிப்படும்போது அதுதான் சிறந்த படைப்பாகும் வாய்ப்பினை அதிகம் கொண்டதாய் இருக்கிறது


*

தீவிரவாதம் என்பது ஒரு துளி இருந்தாலும் போதும்

அது மொத்த பாலிலும் விழுகின்ற விசம்!
*

தமிழ்ப்படங்களால்தான்

புலம்பெயர்ந்த நாடுகளில் இளைஞர்கள் இன்னும்

தமிழில் பேசிக்கொண்டிருக்கிறார்கள்
*

கோவணம் கட்டிக்கொண்டு முப்பாட்டன் வயல் உழுதான். அட நீ அப்படியா என்று முப்பாட்டி சேலையைக் கழற்றி வீசிவிடவில்லை.
ஏன் என்று நினைக்கிறீர்கள்?
பெண் அடிமைத்தனமா ;-)
இப்போதெல்லாம் திரைப்படங்களில் கடுங் குளிரில் நின்று ஆணும் பெண்ணும் நடனம் ஆடுகிறார்கள்.
அவன் கோட்டு சூட்டு டை என்று கட்டி இருக்கிறான். அவளோ அந்தக் குளிரிலும் ஒரு ஜட்டி ஒரு பாடி என்று ஆடித் திரிகிறாள்.
ஏன் என்று நினைக்கிறீர்கள்?
பெண் சுதந்திரமா ;-)


*


எனக்கு விரோதப் போக்கு துளியும் கிடையாது.


நான் அறம் என்ற பக்கம் அழுத்தமாய் நிற்பவன்.


என் பார்வையில் தீவிரவாதங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாய்த் தீண்டத்தகாதவை.


ஒரு கோடி ஊழல் செய்தாலும் ஆயிரம் கோடி ஊழல் செய்தாலும் ஊழல் ஊழல்தான் என்று சொல்பவன் நான். ஊழலில் ஏது ஒப்பீடு?


நீ ரெண்டு பேர் கழுத்தை மட்டும்தான் அறுத்தாய், என்று அழைத்து மடியில் வைத்துக்கொஞ்சுவது என்னால் முடியாது.


தீவிரவாதத்தை எங்கு கண்டாலும் அழிக்கும் முயற்சியில் எழுங்கள். இப்படிப் பாராட்டி உச்சிமுகர்வதைக் கைவிடுங்கள்.


இப்படி உச்சிமுகரச் சொல்வதும் தீவிரவாதம் உள்ளே ஒளிந்து இருப்பதன் அடையாளம்தான்.
*


தாய்மொழி என்று சொன்னால் அது தந்தை பேசிய மொழியும்தான். தாய்மொழி என்றால் பலரும் தாய் பேசுகின்ற அல்லது பேசிய மொழி என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல.


ஒரு இனம் பேசுகின்ற மொழிதான் தாய்மொழி. தமிழினம் பேசுகின்ற மொழி தமிழ்.


இந்த இனத்துக்குள் வேற்றுமொழிக்காரர் ஒருவர் புது உறவு வழி வந்தாலும் தாய்மொழி தமிழ்தான்.


*


ஒருவன் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்கலாம். அது அவன் அறிவை வளப்படுத்தவே செய்யும்.


ஆனால் தாய்மொழியைக் கைவிட்டால் அது தாயைக் கைவிட்டதாகவே ஆகும்.


அவன் அனாதையாகவே அலைவான்.
*


ஆரம்பிச்சிட்டீங்களா ;-)


தீவிரவாதிகள் தீவிரவாதிகள்தான்!


மத்திய அமெரிக்க நாடு ஒன்றில் ஒரே மதத்தவர்கள்தான் இருக்கிறார்கள். அங்கேதான் உலகின் மிக அதிகமான கொலைகள் நடக்கின்றன. அதற்கு எந்த மதமும் காரணமே இல்லை.


ஏன்? அது என்ன தீவிரவாதம்?


தீவிரவாதிகள்

இனங்களில் இருப்பார்கள்,

மதங்களில் இருப்பார்கள்,

ஜாதிகளில் இருப்பார்கள்,

கடவுள் இல்லை என்பவர்களுள் இருப்பார்கள்,

காதலில் இருப்பார்கள்,

காமத்தில் இருப்பார்கள்,

இணையத்தில் இருப்பார்கள்,

சொத்து குவிப்பதில் இருப்பார்கள்,

ஊழலில் இருப்பார்கள்,

புகழ் சேர்ப்பதில் இருப்பார்கள்,

அதிகாரத்தில் இருப்பார்கள்,

ஆணவத்தில் இருப்பார்கள்,

மனோநிலை தவறியதால் இருப்பார்கள்


இன்னும் இருக்கு ஏராளம்!


உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. ஏனெனில் உங்களிடம் தீவிரவாதம் மறைவாய் இருக்கிறது ;-)


அது வெளிவராமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே என்று எனக்குக் கவலையாய் இருக்கிறது ;-)

*ஜ்க்கட்ச்
***

No comments: