இந்த
முழு மொத்தப் பிரபஞ்சமும்
அதையும் தாண்டியதுமான
யாவும் எல்லாமும்
முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டன

உன் பிறப்பு
உன் இறப்பு
உன் அறிவு
உன் அழகு
உன் வாழ்க்கை
இன்னும் உன் எல்லாமும்
என்றோ தீர்மானிக்கப்பட்டுவிட்டன

இந்த உலகம்
இயங்கி இருக்கப்போகின்ற நீளம்
இன்னும் இப் பரந்த வெளியில்
வரப் போகின்ற யாவும் எல்லாமும்
அவை உருவாக்கப்படுவதற்கும்
முன்னதாகவே
தீர்மானிக்கப்பட்டுவிட்டன

உன் வாழ்வை
நீ மாற்றியமைக்க வேண்டுமா

உன் விதியை
நீ வென்றெடுக்க வேண்டுமா

நீ
என்ன 
செய்யவேண்டும்?

No comments: