அது
ஒரு வெள்ளிக்கிழமை

பலரும் முன்சென்றமர்ந்து
செவி நனைத்திருக்க

கொஞ்சம்
தாமதம்தான்

இறுதி
வரிசையில்தான்
இடம்

வந்த இசைப்புயலும்
அரியணை வேங்கையும்
குத்துச்சண்டைக் கனலும்
முன்வரிசை செல்ல
முயலவே இல்லை

வழிவிட்ட
மரியாதைகளை
ஏற்கவும் இல்லை

ஏழைத் தோள்களுக்கு
இடைத் தோள்களாய் நின்று
தலைகுனிந்து
தரை முட்டும்போது
கடைநிலை  ஊழியரின்
கால்களில் சிரம்பட

தொழுகை

No comments: