அறம் இல்லா அறிவு
குறுக்கு வழிகளில்
வெற்றியடையத்தானே
பார்க்கும்

அறம் சொல்லித் தர
இவ்வுலகில் ஏதேனுமோர்
அமைப்பு உண்டா

அறம் சொல்ல வந்த
மார்க்கங்களையும் அவதூறு சொல்லித் தீவிரவாதக்கணக்கில் சேர்த்தாகிவிட்டது.

இனி அறம் இல்லாத அறிவு சுதந்திரமாக இயங்கும்தானே?

பிள்ளைகளுக்கு அறம் ஊட்டி வளர்க்க அரசு எந்த முயற்சியும் செய்யாது.

ஏனெனில் அறம் ஊட்டி வளர்க்கப்பட்டால் ஊழலை எதிர்த்து உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள் அறத்தில் வலுவானவர்கள்.

அறமற்ற தேள்களின் கூடாரத்தில் அன்பு எங்கே வாழப்போகிறது அமைதி எங்கே வாழப் போகிறது நேர்மை எங்கே வாழப்போகிறது சுதந்திரம் எங்கே வாழப்போகிறது?

No comments: