முகநூலில் வேந்தன் அரசு என்கிற ராஜூ ராஜேந்திரன் என்னும் அமெரிக்கா வாழ் தமிழர் ஒரு நாத்திகர் மத வெறுப்பாளர். உலகமே மதத்தால் அழிகிறது என்ற எண்ணம் கொண்டவர். அவ்வப்போது மத இன மொழி என்று அனைத்திலும் நல்லிணக்கம் தேடும் என் இடுகைகளுக்கு எதிராக இடுகைகளை இட்டுக்கொண்டே இருப்பார்.

”முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு உச்சமடைந்ததால் புத்த மதத்தினர் மயன்மரில் மசூதிகளைச் சிதைத்தனர்” என்று ஒரு செய்தியை இட்டார். அவருக்கு நான் தந்த மறுமொழி:

அடடா.... ஏன் வெறியர்கள் பின்னாலேயே அலைகிறீர்கள்.

இந்த புத்தமதத்தினர் புத்தன் சொல்படி கேட்டு இப்போது நடந்ததால் இந்தக் கொடுமையா?

சிந்திக்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் எப்படி?

குற்றவாளிகளைக் கொன்றொழிக்காமல் இதென்ன மதப்பெயரால் துவேசம்?

எங்கள் ஊருக்கு அருகில் ஓர் ஊர். அங்கே எப்போதும் மதக்கலவரம்தான்.

அங்கே ஒரு காமுகன் ஒரு பெண்ணின் கையைப் பிடித்து இழுத்துவிட்டான். அதற்கான காரணம் அவனது அத்துமீறிய ஹார்மோன். அப்பா அம்மா சொல்லித்தராத அறம், மதத்தாலும் அமைதி பெறாத நெஞ்சு, நாசமான நட்பு இப்படி ஏராளம்.

ஆனால் செய்தி எப்படி வந்தது தெரியுமா? ஒரு முஸ்லிம் பெண்ணை ஒரு இந்துவெறியன் கற்பழித்தான்.

அந்த நாயைப் பிடித்து அடித்துத் திருத்தாமல் தண்டித்துச் சிறையில் இடாமல் ஊரே கூடி ஒருவரை ஒருவர் வெட்டி நூறுபேருக்குமேல் சாவு ஆயிரம்பேருக்குமேல் வெட்டுக்காயம்.

உணர்வுகளால் மட்டுமே மனிதர்கள் மதங்களை அணுகுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக அவர்களை வைத்து விளையாடாதீர்கள். உலகை நாசமாக்காதீர்கள். விட்டுவிடுங்கள்

Comments

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 3 Final) - இளையராஜா டொராண்டோ