நாம்
அறியாததல்ல

மனிதப் பிறவிகளுள்
மூடர்கள் உண்டு
வெறியர்கள் உண்டு
வக்கிரர்கள் உண்டு

அவர்கள்
எல்லா மதங்களிலும்
நச்சுக் களைகளாய்
இங்கொன்றும் அங்கொன்றுமாய்
விளைந்திருப்பார்கள்

செழித்துக்கிடக்கும்
பயிர்களின் பசுமைக்குப்
பங்கமாய் இருப்பார்கள்

மதங்களுக்கு மாறுசெய்யும்
அந்தக் கிருமிகளின்
அட்டூழியங்களை
மதங்களின் பெயரால் அழைத்து
பாமரப் பொது மக்களின்
உணர்வுகளைக் குதறி
நாச வேலையில் ஈடுபடும்
ஈனப் பிறவிகளே
கருநாகப்பாப்பிலும்
கொடு நஞ்சு கொண்டோர்


No comments: