தாம்பத்யம்

எவ்வளவு ஆழம் சென்றாலும் அவ்வளவு ஆழமும் தெரிஞ்சுக்க முடியுமா? அப்படியே தெரிஞ்சிக்கிட்டாலும் அது அப்படியே மாறாம இருக்குமா?

காதல் திருமணம் ஆழம் பார்த்துத்தான் கால் ஊன்றுகிறது.

நிச்சயிக்கப்பட்ட திருமணம் பெற்றோர்களால் மட்டுமே ஆழம்பார்த்துக் கால் ஊன்றுகிறது.

பின்னது வென்று முன்னது தோற்பதற்கு முக்கியமான காரணங்களுள் முதன்மையானதென்று நான் நினைப்பது இதுதான்:

இரண்டுமனம் சாகும்வரை ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றால் ஒருவர் இன்னொருவரை மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

பரவாயில்லை விட்டுத்தள்ளு பண்பாடு - பாலிசி ;-)

பெற்றோர்கள் இதைத்தான் கற்றுக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.

தனித்துவிடப்பட்ட காதலர்களுக்கு அப்படியான வாய்ப்பே இல்லை.

அவர்களின் காதல் அதைச் சொல்லிக்கொடுத்தாலும் அவை அவர்கள் காதில் விழுவதும் இல்லை.

மாறிவிட்டாயே என்னை ஏமாற்றிவிட்டாயே என்ற கோபமே முன்னின்று காதலைக் கொன்றுவிடும்.

No comments: