ஆடுகளுக்குள்
ஒற்றுமை இல்லாவிட்டால்
ஓநாய்களுக்குக் கொண்டாட்டம்தான்

ஒழுக்கமுடையவர்களுக்குள்
ஒற்றுமை இல்லாவிட்டால்
வெறியர்களுக்குக் கொண்டாட்டம்தான்

இனங்களால் மொழிகளால்
மதங்களால் சாதிகளால்
வேறு வேறு என்றாலும்
மனித நேயத்தால் ஒன்றுபட்டால்
ஓநாய்களை ஓடித் தொலையும்

வாழ்வில் சொர்க்கம்
மறுப்புகளைத் தகர்த்து
மடியில் அல்லவா கிடக்கும்

No comments: