உலக வன்முறைக்கான தீர்வு?

(பெண்ணுக்கு நிகழும் வன்முறையைக் கண்டு செய்வதறியாது திகைத்துப் புலம்பிய நண்பருக்கு நான் எழுதிய மறுமொழி)

ஆரம்பத்தில் மதங்களின்மீது வெறுப்பு இருந்தது எனக்கு. ஆனால் அவற்றின் போதனைகளை மெல்ல மெல்ல உணரத்தொடங்கினேன்.

குறிப்பாக நான் அதிகம் அறிந்த இஸ்லாத்தின் கடமைகளை ஆயத் தொடங்கினேன்.

அது தன்னை மதமென்று சொல்வதில்லை வாழ்க்கைக்கான மார்க்கம் என்று சொல்கிறது.

பிறந்ததுமே குழந்தையின் காதில் நல்லவை மட்டுமே ஓதப்படுகின்றன. அழுத்தமாக அறச் செய்தி பதிக்கப்படுகிறது.

ஏழுவயதுக்குள் ஐந்து வேளைத் தொழுகை. அது ஏன் என்று தேடிப்பார்த்தேன்.

அதிகாலை கேட்கும் பாடல் நாளெல்லாம் கேட்கும். அப்படி அதிகாலையிலேயே அமைதியான தியானம் ஊட்டப்படுகிறது.

தொழுகையின் நிலைகளை உற்றுக் கவனித்தால் தெரியும் அது யோகா மற்றும் மனதை ஒருநிலைப்படுத்தும் தியானம் இரண்டையும் கலந்த கலவைபோல் இருக்கும்.

அதிகாலையே ஒருவனை அமைதிப்படுத்துகிறது. அந்த அமைதி காலை எல்லாம் நீடிக்கிறது.

பின் மெல்ல மெல்ல விலகத்தொடங்கும் மதியத்தில் இன்னொரு தொழுகை.

பின் அத்தனை இடைவெளிதாராமல் இன்னொன்று பின் இன்னொன்று.

ஏன் அத்தனை நெருக்கமாக அந்த வேளைகளில்?

மனம் சஞ்சலப்பட்டு திசைமாறும் நேரங்கள் அவை. அதனால்தான்.

இறுதியாய் உறங்கச் செல்லும்முன் ஒன்று.

பின் மீண்டும் அதிகாலையிலேயே துவங்கிவிடுகிறது தொழுகை.

இப்படி ஒருவனை அறத்துக்குள்ளும் அமைதிக்குள்ளும் கட்டிவைத்தால்தான் அவன் நல்லவனாய் இருக்கமுடியும் என்று அன்று ஆய்ந்து பார்த்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டேன்.

அதையும் தாண்டி குற்றம் செய்பவர்களை மிகக் கடுமையான சட்டத்தால் உடனடியாகவே தண்டிப்பது. அவனை சமூகத்திலிருந்து அகற்றி எறிவது.

நாம் இந்தியர்கள் கொஞ்சம் மென்மையானவர்கள். ஆனால் அரபுக்காரர்கள் கரடுமுரடானவர்கள்.

அவர்களையே அடக்க நபிபெருமானாரால் மட்டுமே முடிந்தது.

அதனால்தான் பெர்னாட்சா புகழ்ந்து தள்ளினார்.

Comments

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்