நவீன பூதங்கள்


கேட்டதும் நீர்தூவும்
கருணை மழையாய்

நினைத்ததும் கதிர்பொழியும்
வள்ளல் சூரியனாய்

வேண்டியதும் விதை வளர்க்கும்
நஞ்சை நிலமாய்

அழைத்ததும் விருந்து வைக்கும்
பொதிகைத் தென்றலாய்

மௌனமாய் அள்ளி வழங்கும்
பூரண ஆகாயமாய்

கூகுள் யாகூ அல்டாவிஸ்டா
இன்னபிற நவீன பூதங்களாய்
இணைய நிலமெங்கும்
தேடுதளங்கள்

2 comments:

cheena (சீனா) said...

பஞ்ச பூதங்களும் பொய்க்கின்ற இக்காலத்தில், நவீன பூதங்கள் தான் நம்மைக் காப்பாற்றுகின்றன. இவைகள் பொய்ப்பதில்லை. உவமை அருமை. வாழ்த்துகள்

அன்புடன் புகாரி said...

இந்தக் கவிதையும் உங்களைச் சென்றடைந்ததில் மிக்க மகிழ்ச்சி சீனா