மரணம் உன்னைக் காதலிக்கிறது - முதுமை


முதுமை என்பது
தேய்பிறையல்ல
அது முழுநிலவைத் தொட
வளரும்
ஒளி விரல்களால் ஆன
வளர்பிறை
அமாவாசை என்பதும்
முழுநிலாதான்
கறுப்பு முழுநிலா
அது
பௌர்ணமியைவிட
பூரணமானது
குறைவற்ற நிம்மதியுடையது
மரணம் போன்றது

5 comments:

பூங்குழலி said...

//அமாவாசை என்பதும்
முழுநிலாதான்
கறுப்பு முழுநிலா
அது
பௌர்ணமியைவிட
பூரணமானது //


நல்லா இருக்கு இது

Unknown said...

ஆமாம் பூங்குழலி. அமாவாசைநிலவின் மறுபக்கமும் கறுப்புதான். ஆனால் பௌர்ணமி நிலவின் மறுபக்கம் கறுப்பு. எது முழுமையான பூரணம்?

அன்புடன் புகாரி

Gurudevaimshigh said...

பூர்ணமத பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமதாய பூர்ணமேவ வஷிஷ்யதே

இதுவும் (இம்மையும்) நிறைவு: அதுவும்(மறுமையும்) நிறைவு! இதையே....

இதுவும் (பகலும்) நிறைவு: அதுவும்(இரவும்) நிறைவு! என்றும்..

இதுவும் (சுகமும்) நிறைவு: அதுவும்(துக்கமும்) நிறைவு! என்றும்..

பொருள் கொள்ளலாம்.

அதாவது, எதிலும் நிறைவு காண்பவரால், ஒன்றிலிருக்கும் நிறைவையே
மற்றொன்றில் காண இயலும். ஒளி நிரம்பியிருக்கிற இடத்தில் இருளின்
நிறைவையும், ஜீவன் நிரம்பியிருக்கிற இடத்தில் மரணத்தின் நிறைவையும் காண
இயலும். பூவிலும் முள்ளிலும் ஒரே மாதிரியான நிறைவைக் காண இயலும்.

அது விரக்தியன்று! அதனை விரக்தியென இகழ்பவர் வண்டிக்கு ஒரு சக்கரம்
போதும் என்று துணிபவர்க்கு சமானம். அதுவே மனம் அடையக்கூடிய உச்சகட்ட
அமைதி! அவ்வமைதி பெற்றவர்க்கு மரணம் குறித்த சிந்தனை வருத்தம் தரா.
அதற்குள்ளிருக்கும் அழகையும் கண்டு பருகிடுகிற ஒரு மூன்றாம் கண் முளைத்து
விடும்.

அப்பார்வை இக்கவிதையில் வெளிப்படுகிறது. நன்று.

குருமூர்த்தி

கவிஞர் சக்தி said...

அன்பின் நண்பர் புகாரி,

முதுமைக்கு நல்லதொரு விளக்கம்
முத்தமிழ் அழகின் துணை கொண்டு
முக்கனிச் சுவையோடு தந்த
புதுக்கவிதைப் புயலுக்கு அன்பான

வாழ்த்துக்கள்

அன்புடன்

சக்தி

கவிஞர் ருத்ரா said...

முதுமை என்னும் இளமை
===================================ருத்ரா



அன்புக்குரிய
"அன்புடன் "புகாரி அவர்களே!முதுமை..இளமை

ஆகா!
அருமையான‌
உரையாடல் களஞ்சியத்தை
உள்ளடக்கி தந்திருக்கிறது
உங்களது
உன்னதமான கவிதை!

ப‌ட்டிம‌ன்ற‌ம்
வைத்தாலும்
அய்யா சால‌ம‌ன் பாப்பையா
அவ‌ர்க‌ளே
ஒத்துக்கொள்ள‌மாட்ட‌ர்க‌ள்
தான்
முதுமையின் முனையில்
இருப்ப‌தாக‌!
அதுவும் உண்மைதான்.
சாய்வு நாற்காலிக‌ளில்
ப‌த்திரிகையை வைத்துக்கொண்டு
(அதுவும் காற்று வ‌ருவ‌த‌ற்காக‌
வீசிக்கொண்டு)
கிட‌க்க‌வேண்டிய‌ நிலையில்
உல‌க‌ம் சுற்றும் வாலிப‌னாக‌
உரைவீச்சு செய்துகொண்டிருக்கும் அவ‌ர்
இள‌மையின் க‌திர்வீச்சு அல்ல‌வா?
எண்ப‌து வ‌ய‌திலும்
எக்ஸாடிக் எழுத்துக்க‌ளை
குமுதத்தில்
வாரி இறைத்த‌வ‌ர் அல்ல‌வா?
சாண்டில்ய‌ன்!
இள‌"மை"
முது"மை"
எழுதுவ‌த‌ற்கு இர‌ண்டும்
ஒரே மை தான்.
தொட்டுக்கொண்டு எழுதுவ‌தில் தான்
அங்கே வ‌ய‌துக‌ள்
உதிர்ந்து போகின்ற‌ன‌.
ந‌ம் ம‌திப்பிற்குறிய‌
ஜெய‌பார‌த‌ன் அவ‌ர்க‌ளை
எடுத்துக்கொள்ளுங்க‌ள்
அவ‌ர் ஐன்ஸ்டீன் ஸ்பேஸ் டைம் வார்ப்பில்
(SPACE TIME WARP)
கால வெளியின் நெசவு ஓடத்தில்
உட்கார்ந்துகொண்டு
த‌ன் பேனாவுக்குள்ளேயே
ஒரு ஹொலொடெக் (HOLODECK)
(அதாவது முப்பரிமாண உலகை
"துகள் வீச்சு" ஒளியில்
திடரூபமான சம்பவங்கள் ஆக்கி
அங்கு தங்கிப்பார்க்கும் தளம்
ie "மாயத்தளம்")
அமைத்துக்கொண்டு
ஒளியாண்டுக‌ளையே
மாற்றி மாற்றி
சோழிக‌ளைப்போல‌
குலுக்கி குலுக்கி
போட்டுக்கொண்டு
இந்த‌ வ‌ய‌துக‌ளின்
வ‌யித்தையே
க‌ல‌க்கி கொண்டிருக்கிறார்.
அந்த‌ அற்புத‌ மையில்
நாமும் கொஞ்ச‌ம்
"குவாண்ட‌ம் டெலிபோர்டேஷ‌ன்"
(அளவைஇயக்கவியல் நுண்பாய்ச்சல்)
செய்ய‌லாம்.
இதைத்தானே விண்வெளி இயல் மேதை
அப்துல்க‌லாம் அவர்கள்
"க‌ன‌வு காணுங்க‌ள்" என்றார்.
அவர் எழுத்து எறும்புகள்
ஊராத இலக்கியப்புத்தகத்தின்
இடமில்ல,தடமில்லை.
இளமையும் முதுமையும்
எதிர் எதிர் துருவங்களாக‌
இருக்க வேண்டிய அவசியமில்லை.
நடுவு நிலமையோடு
சிந்தித்தால்
"த‌லைமுறை இடைவெளி"
என்ற‌ சொல்லே தேவை இல்லை.
அது...
த‌லைம‌யிர் வெட்டிக்கொள்ளும்
க‌த்திரிக்கோல்க‌ள் தான்
க‌வ‌லைப்ப‌ட‌ வேண்டும்.
ப்ரோடான் நேர்
எல‌க்ட்ரான் எதிர்
இரு துருவ‌ப்பாய்ச்ச‌லில்
எல‌க்ட்ரான் காணாம‌ல்
போய் இருக்க‌வேண்டுமே.
இல்லையே.
கார‌ணம்

ப்ரோட்டான்

எல‌க்ட்ரானைப்போல்
இர‌ண்டாயிர‌ம் ம‌ட‌ங்கு எடையுள்ள‌து.
இடையில் ந‌டுநிலையாக‌
இருக்கும் நியூட்ட்ரானும்
இந்த‌ ந‌டுனிலை ந‌ட்புவெளிக்கு
கார‌ணமாக‌ இருக்க‌லாம்.
தாத்தாக்க‌ளே
ஓடி விளையாடுங்க‌ள்!
சிறுவ‌ர்க‌ளே
நீங்க‌ளும் க‌ன்ன‌த்தில்
கை வைத்துக்கொண்டு
அந்த‌ அக‌ன்ற‌ பிர‌ப‌ஞ்ச‌வெளியை
ந‌ம்மொடு விளையாட‌ அழைக்க‌லாமா?
என்று
சிந்தியுங்க‌ள்!

புகாரிப்ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தின்
வேந்த‌ரும்..துணைவேந்த‌ரும்
இன்னும் எல்லாமுமாக‌ இருந்து
இந்த‌ எழுத்து ச‌முத்திர‌த்தை
தூக்கி நிறுத்திக்கொண்டிருக்கும்
புகாரி அவ‌ர்க‌ளே?
ஒரு ஆழ‌மான‌ க‌விதையை
அல்ல‌வா
இங்கே உல‌வ‌விட்டிருக்கிறிர்க‌ள்.
அதை ஆழ‌ம் பார்க்க‌லாம்
என்று தான்
பேனா எது? காதித‌ம் எது?
மை ஏது? எழுத்து ஏது
என்று
த‌ட‌விக்கொண்டிருக்கிறோம்.
அத‌ற்கு
ஆயிர‌ம் பாராட்டுக‌ள்
ஆயிர‌ம் ந‌ன்றிக‌ள்
(வ‌ழ‌க்க‌ம்போல‌
ஒரு நீநீநீநீ........நீநீநீண்ட‌ ப‌திலை
இழைவிட்டிருப்பதற்கு

(அளவைஇயக்கவியல் நுண்பாய்ச்சல்)ருப்ப‌த‌ற்கு
ம‌ன்னித்து விடுங்க‌ள்)


இப்ப‌டிக்கு
அன்புட‌ன் ருத்ரா.