மூன்று கட்சிகளின் கூட்டாட்சியே இந்த புகாரி


இரண்டு பேர் இருந்தால், அங்கே குறைந்தபட்சம் என் கட்சி, உன்கட்சி, நம் கட்சி என்று மூன்று கட்சிகள் இருக்கும் என்று ஒரு கருத்து உண்டு.

எனக்கோ இரண்டு பேர் என்பதும் அவசியம் இல்லை.
என்னைப்போல் ஒருவன் இருந்தாலே போதும் அங்கே மூன்று கட்சிகள் தோன்றிவிடும்.

என் எண்ணங்கள் ஒரு கட்சியாய் உருவாகும்
என் ஐயங்கள் இன்னொரு கட்சியாய் நிற்கும்
என் தீர்மானங்கள் மூன்றாம் கட்சியாய் மலரும்

என் தீர்மானங்கள் எல்லாம் தற்காலிகமானவையே.
அவையே நிரந்தரமானவையாகவும் ஆகக்கூடும்.

ஏன் தற்காலிகம் என்கிறேனென்றால், அவ்வப்போது அது எண்ணங்களாலும் ஐயங்களாலும் ஆய்வுசெய்யப்பட்டு ஊர்ஜிதப்படுத்தப்படும் அல்லது உதறித் தள்ளப்படும்.

என் எண்ணங்களை என்னால் தடுத்து நிறுத்த இயன்றதில்லை.
என் ஐயங்களையும் என்னால் முடக்கிப் போட முடிந்ததில்லை.
ஒரு தீர்மானம் தீட்டாமல் எந்த உறக்கமும் என்னைத் தழுவியதும் இல்லை.

இந்த மூன்று கட்சிகளின் கூட்டாட்சியே இந்த புகாரி.

2 comments:

சீனா said...

உண்மை உண்மை புகாரி

மூவரின் கூட்டாட்சியே மனிதன் - நான் இக்கட்சிதான்

mohamedali jinnah said...

'என் எண்ணங்கள் ஒரு கட்சியாய் உருவாகும்
என் ஐயங்கள் இன்னொரு கட்சியாய் நிற்கும்
என் தீர்மானங்கள் மூன்றாம் கட்சியாய் மலரும்'

உங்களுக்கு மலருகிறது
எனக்கு உதிர்கிறது

மலர்ந்தது மணம் வீசுகிறது
மலர்ந்ததால் மனம் மகிழ்கிறது

உதிர்ந்தது எருவாகிறது