வள்ளல் தமிழ்த்தாயே

கணினித் திரை நிறைத்து
கற்கண்டாய்க் குவிந்தாயே
இணைய வலை கிழித்துப்
பொற்பாதம் சுழன்றாயே

அழியும் மொழிகளுக்குள்
தமிழிருக்கும் என்றாரே
ஒளியாய் ஒளிப்பிழப்பாய்
உச்சத்தை வென்றாயே

துள்ளும் நடைபோட்டுத்
தொழில் நுட்பம் தாண்டுகின்றாய்
மெல்லச் சாவதினிச்
சொன்னவனின் மொழியென்றாய்

உள்ளம் உருகியோட
உனதுமடி தலைவைத்தேன்
வள்ளல் தமிழ்த்தாயே
வளரமுதம் ஊட்டுமம்மா

2 comments:

சாந்தி said...

அருமையான வேண்டுகோள்..


--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

ஆயிஷா said...

தமிழ் இனி சாகாது என்பதை அழகாக கூறி விட்டீர்கள் ஆசான்.
அன்புடன் ஆயிஷா