
கருணையே வடிவானது
மரணம்
கருவான நொடிமுதலாய்
காதலிக்கிறது அது உன்னை
ஆனபோதிலும்
ஒருபோதும் தட்டிப்பறித்தெடுக்க
எண்ணுவதே இல்லை
அது உன் உயிரை
தானே வரும் நாளுக்காய்க்
காதலோடு காத்திருக்கும்
உயர் காதல் கொண்டது
மரணம்
உன் தற்கொலை முயற்சிகள்
தோல்வியில் தொங்கிப்போவதற்கு
கருணைமிகு மரணமே காரணம்
கனிந்து நீ நிறைந்தவனாய்
வரும் நாளல்லாது
உடைந்து நீ
ஓடிவரத் துடிக்கும் நாளில்
உன்னை ஏற்காமல்
அது கதறியழும்
கருணையே வடிவானது
மரணம்
2 comments:
//உன் தற்கொலை முயற்சிகள்
தோல்வியில் தொங்கிபோவதற்கு
கருணைமிகு மரணமே காரணம்
கனிந்து நீ நிறைந்தவனாய்
வரும் நாளல்லாது
உடைந்து நீ
ஓடிவரத் துடிக்கும் நாளில்
உன்னை ஏற்காமல்
அது கதறியழும்//
நல்லா இருக்கு இந்த பார்வை
அதன் கருணையில் தான் தினம் செத்து செத்துப் பயணிக்கின்றோமோ?
Post a Comment