பேரறிவு - மரணம் உன்னைக் காதலிக்கிறது


ஒரு
மரண நிகழ்வுக்குச்
சென்றுவரும் மனிதன்
அந்த ஒருநாள் மட்டுமாவது
நல்லவனாய் வாழ்வான்
அதுதான் மரணம் தரும் அறிவு
எதை இழக்கப்போகிறோம்
இங்கே என்ற தெளிவு
மனிதனைச் செதுக்குகிறது
எந்த நொடியும் மரண மடிகளில்
நிம்மதி ஊஞ்சல் ஆடலாம் என்ற
பேரறிவு பெற்றவன்
தானும் வாழ்ந்து
பிறரையும் வாழவைக்கும்
கருணை இதயம்
கொண்டவனாகவே வாழ்வான்

3 comments:

சிவா said...

முற்றிலும் உண்மை ஆசான்

சீனா said...

இச்சிந்தனை இயல்பான வாழ்வினிற்கு - சராசரி மனிதனுக்கு - ஒத்து வராது புகாரி

மரணம் தரும் அறிவு என்பது மிகப் பெரிய தத்துவம் - அது எளிதில் புரியாது - புரிய வேண்டிய தேவையுமில்லை - மரண சிந்தனை மனிதனை மாற்றாது - மாறாக மனம் தடுமாறிக்கொண்டிருக்கும் மனிதனை மரணத்திற்குச் செல்லத் தூண்டிவிடும்

இரு பகக்ம் கூர்மையுள்ள கத்தி - பயன் படுத்தும் அறிவு மழுங்கிப் போன மன நிலையில் உள்ளவன் ம்ரணத்தைத் தேர்ந்தெடுத்து விடுவான் - கவிஞர்கள் சிந்திக்க வேண்டும்

Unknown said...

தவறாகப் புரிந்துகொள்ளப்படுமா என்று கவலைப்படுகிறேன் சீனா. அதோடு, நல்ல கருத்துக்களைச் சொல்ல முடியாத நிலையா என்றும் கவலைப்படுகிறேன் சீனா.

இறந்ததும் சொர்க்கம் கிடைக்கும் என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதற்காக யார் இறந்துபோகிறார்கள் சீனா?