மரணம் உன்னைக் காதலிக்கிறது - மௌனம்


மரணம் என்பது
பரிசுத்தமான மௌனம்
அந்த மௌனத்துக்குள்
மலர்ந்ததும்
நிகரில்லாத நிம்மதி
உன்னை அள்ளியணைத்து
அதன் முத்தங்களாகவே
மாற்றிவிடும் உன்னை
அதன்பின் எப்போதும்
துயரத்தின் பொருளைக்கூட
நீ அறியமாட்டாய்

41 comments:

சாந்தி said...

நல்லாருக்குன்னு சொல்ல முடியலை..

அழிச்சாட்டியம் செய்யும் குழந்தையை அமுதூட்டி, விளையாடி தூங்கிக்கொண்டே புன்னகை சிந்தும் குழந்தையைப்பார்க்கும் தாய்க்கு கிடைக்குமே ஒரு மெளனம்.. , அது ,

அருமையாய் பொருந்துது ஆசான் ...

( மரணத்தை பற்றி இனி உங்களிடமிருந்து கவிதை வருமாயின் நான் பின்னூட்டம் இடப்போவதில்லை.. மன்னிக்கவும்...)


--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

அன்புடன் புகாரி said...

//நல்லாருக்குன்னு சொல்ல முடியலை.. ///

காரணம் அது மரணம் என்பதால்தானே?


///அழிச்சாட்டியம் செய்யும் குழந்தையை அமுதூட்டி, விளையாடி தூங்கிக்கொண்டே புன்னகை சிந்தும் குழந்தையைப்பார்க்கும் தாய்க்கு கிடைக்குமே ஒரு மெளனம்.. , அது , ////


அதைவிட சிறந்த மௌனம் உங்களுக்கு வேண்டாமா :)


//அருமையாய் பொருந்துது ஆசான் ...

( மரணத்தை பற்றி இனி உங்களிடமிருந்து கவிதை வருமாயின் நான் பின்னூட்டம் இடப்போவதில்லை.. மன்னிக்கவும்...)///


ஏன் சாந்தி?

அன்புடன் புகாரி

சாந்தி said...

//ஏன் சாந்தி?//

எதிர்மறை எண்ணம் கொள்ளச்செய்வதால் ஆசான்.. எனக்கு தேவை நேர்மறை எண்ணங்கள் ..கடமைகள் இருக்கே.. அதுவே ஊக்கமும்..:)

சாந்தி said...

///காரணம் அது மரணம் என்பதால்தானே?///

ஆம்.


///அதைவிட சிறந்த மௌனம் உங்களுக்கு வேண்டாமா :)///


இப்பூவுலகிலேயே சொர்க்கமும் நரகமும் இருக்கு நம் மனதிலேயே ஆசான்..

அற்புதமானவர்களை ( கடவுள்களை ) இவ்வுலகிலேயே சந்தித்துவிட்டேன்..இனியொரு கடவுளைக்காண அந்த மெளனத்துக்காக காத்திருக்கப்போவதில்லை..

நான் இவ்வுலகுக்கு கடன் பட்டிருக்கிறேன் ..செய்ய வேண்டிய பதில் உபகாரம் நிறைய இருக்கு என் பங்குக்கு.. அதன் பின்னரே மரணம் பற்றி யோசிப்பேன்..

வேல் said...

மரணம் பற்றி அழகாய் ஒரு கவிதை புகாரி...


சாந்தி அக்காவை இப்டிலாமா பயமுறுத்துவது :)


நிறைய கவிதைகள் அன்புடன்ல போட்டு எங்களை திணறடிக்கிறீர்கள்...


--
மிக்க அன்புடன்
வேல்
ஊக்கமது கைவிடேல்!

அன்புடன் புகாரி said...

//எதிர்மறை எண்ணம் கொள்ளச்செய்வதால் ஆசான்.. எனக்கு தேவை நேர்மறை எண்ணங்கள் ..கடமைகள் இருக்கே.. அதுவே ஊக்கமும்..:) ///

இயற்கையும் நிதர்சனமும்தான் நேர்மறை. பொய்யும் செயற்கையும்தாம் எதிர்மறை.

இல்லையா?

அன்புடன் புகாரி said...

//இப்பூவுலகிலேயே சொர்க்கமும் நரகமும் இருக்கு நம் மனதிலேயே ஆசான்..//


ஆனால் அந்த மனம் உங்க்ள் கையில் இருக்காது சாந்தி :)//அற்புதமானவர்களை ( கடவுள்களை ) இவ்வுலகிலேயே சந்தித்துவிட்டேன்..இனியொரு கடவுளைக்காண அந்த மெளனத்துக்காக காத்திருக்கப்போவதில்லை..//


நீங்கள் சந்தித்தவர்களை நீங்கள் உயர்வென எண்ணுகிறீர்கள். அவர்களைக் கேட்டால்தனே உண்மை உங்களுக்கும் புரியும் :)//நான் இவ்வுலகுக்கு கடன் பட்டிருக்கிறேன் ..செய்ய வேண்டிய பதில் உபகாரம் நிறைய இருக்கு என் பங்குக்கு.. அதன் பின்னரே மரணம் பற்றி யோசிப்பேன்.. ///

மரண மௌனத்திடம் அந்த நிகரற்ற நிம்மதியிடம் நீங்கள் கடன் பட்டிருக்கவே மாட்டீர்கள்

அன்புடன் புகாரி said...

மரண மௌனத்திடம் அந்த நிகரற்ற நிம்மதியிடம் நீங்கள் கடன் பட்டிருக்கவே மாட்டீர்கள்

ஏனெனில் அந்தக் குற்ற உணர்வை உஙக்ளுக்குத் தராமல் உங்களை மரணம் உயிராக நேசிக்கிறது. உங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் காப்பாற்றும் ஒரே சக்தி மரணம்தான்

சாந்தி said...

//இயற்கையும் நிதர்சனமும்தான் நேர்மறை. பொய்யும் செயற்கையும்தாம் எதிர்மறை.

இல்லையா?///


எது பொய்?..நாம் பிறந்தது, வாழ்ந்தது வாழ்வது?... எது செயற்கை?.. நம் மனம்?.. நம் எண்ணங்கள்?... அதில் இருக்கும் அன்பு , இரக்கம்?..தியாகம்?..


யாரும் அனுபவித்து சொல்லாத மரணத்தைவிட நாம் வாழும், அனுபவிக்கும் இவ்வாழ்க்கை நிதர்சனம் தானே?...

அப்ப இதுதான் நேர்மறையும்..

சாந்தி said...

//இப்பூவுலகிலேயே சொர்க்கமும் நரகமும் இருக்கு நம் மனதிலேயே ஆசான்..


ஆனால் அந்த மனம் உங்க்ள் கையில் இருக்காது சாந்தி :)//


ஏன் இல்லை.. ?.. பொறுமை, அன்பு ,தியாகம் , கடமை சரியாக செய்யும்போது நான் சொர்க்க மனது கொண்டிருக்கிறேன்...


சூது, களவு, கொடுமை , பொய் , புரட்டு செய்யும் போது நான் நரக மனது கொண்டுள்ளேன்...

அதே போல சொர்க்க மனது கொண்டவரோடு அருகிருக்கும்போது நான் சொர்க்கத்தில்தானே இருக்கிறேன்..

சாந்தி said...

//நீங்கள் சந்தித்தவர்களை நீங்கள் உயர்வென எண்ணுகிறீர்கள். அவர்களைக் கேட்டால்தனே உண்மை உங்களுக்கும் புரியும் :)//மற்றவருக்கு அற்புதமானவராய் காட்சியளிக்கும் ஒருவர் நிச்சயம் வாழ்க்கையை புரிந்தவராய்தான் இருப்பார்...முழுமையாக வாழ்ந்திருப்பார்..

சாந்தி said...

இவ்வுலக கடனை அடைக்காது மரணம் என்னை தழுவினால் அந்த மரணத்தை நான் வெறுக்க அல்லவா செய்யணும்..?..

என் கடன் அடையாது நான் மட்டுமே காப்பாற்றப்படும் சுயநலம் வேண்டாமே எனக்கு.....

அன்புடன் புகாரி said...

மண்ணின் மனிதன் ஒரு கரு. கருவின் சிந்தனைகள் வேதனையின் முனகல்கள். அவன் மரணத்தின் மடிகளில் குழந்தை. அதன்பின் வரும் சிந்தனை நிம்மதியின் மேன்மையில் வருமல்லவா?

அன்புடன் புகாரி said...

மரணம் திணறும் அளவுக்கு சுகம் தரவல்லது வேல்!

பயம் தீர்ந்தால் நிம்மதி நமதாகும்!

என்ன சொல்றீங்க?

சாந்தி said...

//மண்ணின் மனிதன் ஒரு கரு. //

சரி..


//கருவின் சிந்தனைகள் வேதனையின் முனகல்கள்.

மகிழ்ச்சியே இல்லையா?.. நாம் தேடுவதில்லை என்பதுதான் நிஜம்...

அவன் மரணத்தின் மடிகளில் குழந்தை. //

சரி..


//அதன்பின் வரும் சிந்தனை நிம்மதியின் மேன்மையில் வருமல்லவா?//

அதன்பின் சிந்தனை எங்ஙனம்.?

அன்புடன் புகாரி said...

//ஏன் இல்லை.. ?.. பொறுமை, அன்பு ,தியாகம் , கடமை சரியாக செய்யும்போது நான் சொர்க்க மனது கொண்டிருக்கிறேன்...//


எத்தனை பண்பட்டாலும் அது உங்களிடம் தங்காது என்பதை நாம் சற்றே அமைதியாய் அமர்ந்து கண்டுபிடித்துவிடலாம் சாந்தி. அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்றார்கள் அறிஞர்கள்//சூது, களவு, கொடுமை , பொய் , புரட்டு செய்யும் போது நான் நரக மனது கொண்டுள்ளேன்...

அதே போல சொர்க்க மனது கொண்டவரோடு அருகிருக்கும்போது நான் சொர்க்கத்தில்தானே இருக்கிறேன்.. //


பார்த்தீர்களா இரண்டு மனது கொண்டீர்கள். மனம் மேன்மையானது அல்ல! மரணத்தில்தான் அது மேன்மையடையும். நிம்மதியைத் தழுவும்.

அன்புடன் புகாரி said...

///மற்றவருக்கு அற்புதமானவராய் காட்சியளிக்கும் ஒருவர் நிச்சயம் வாழ்க்கையை புரிந்தவராய்தான் இருப்பார்...முழுமையாக வாழ்ந்திருப்பார்.. //வாழ்வை வாழ்ந்திருப்பது என்பது வேறு முழுமையான நிம்மதியைப் பெற்றிருப்பது என்பது வேறு. ஒப்புக்கொள்கிறீர்களா சாந்தி?

அன்புடன் புகாரி said...

//என் கடன் அடையாது நான் மட்டுமே காப்பாற்றப்படும் சுயநலம் வேண்டாமே எனக்கு..... //
பார்த்தீர்களா? கடன் பட்டிருக்கிறேன் என்ற கவலை நிலையில், நிம்மதியற்ற நிலையில் இருக்கிறீர்கள் நீங்கள் இந்த மண்ணுலகில்

இதுபோல எந்த துக்கமோ குற்ற உணர்வோ வேண்டாம் மரணத்தில் மடியில் நீங்கள் பொன்னூஞ்சல் ஆடும்போது

அன்புடன் புகாரி said...

//அதன்பின் சிந்தனை எங்ஙனம்.? ///

அது நீங்கள் அறியாததல்லவா? நானும் அறிவேன் என்று பீற்றிக்கொள்ளவில்லை. ஆனால் முழு நிம்மதி அங்கே இருப்பதாய் நம்புவதில் குறையே இல்லை அல்லவா

சாந்தி said...

மேலே நீங்கள் சொன்ன அனைத்துக்கும் முத்தாய்ப்பாய் இறுதி வரியில் சொன்னீர்கள் ஆசான்...

" இருப்பதாய் நம்புவது..."

அந்த நம்பிக்கை தான் வாழ்க்கை...

அது இல்லாதவன் உயிரோடு இருந்தாலும் மரணித்தவன் தான்...


மரணத்தில் நிம்மதி கிடைக்கும் என்பதே நம்பிக்கைதானேயொழிய அதன்பின் என்ன நடக்கும் என்பதே யூகம்தான்...

அதைவிட, இவ்வுலகிலேயே பிறருக்காக வாழ்பவர்கள் அந்த நிம்மதியை சந்தோஷத்தை அடைதுவிடுகிறார்கள் என்பது என் எண்ணம்...

மரணம் வரை காத்திருக்கவேண்டியதில்லை என்பதும் திண்ணம்...

அன்புடன் புகாரி said...

//" இருப்பதாய் நம்புவது..."

அந்த நம்பிக்கை தான் வாழ்க்கை...

அது இல்லாதவன் உயிரோடு இருந்தாலும் மரணித்தவன் தான்...///

மரணித்தவனுக்கும் மரண அவஸ்தையில் இருப்பவனுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா சாந்தி? அதுதான் நிம்மதி!


மரணத்தில் நிம்மதி கிடைக்கும் என்பதே நம்பிக்கைதானேயொழிய அதன்பின் என்ன நடக்கும் என்பதே யூகம்தான்...

அடர் மௌனம் நிம்மதியேதான் சாந்தி.


அதைவிட, இவ்வுலகிலேயே பிறருக்காக வாழ்பவர்கள் அந்த நிம்மதியை சந்தோஷத்தை அடைதுவிடுகிறார்கள் என்பது என் எண்ணம்...


இது சிறு நிம்மதியாவது பெறமாட்டோமா என்று நாம் செய்யும் காரியங்கள்தானே இவை சாந்தி

மரணம் வரை காத்திருக்கவேண்டியதில்லை என்பதும் திண்ணம்...

இயன்றதை செய்யுங்கள். அதில் தவறே இல்லை. ஆனால் நீங்கள் முழுமைய அடையப்போவது மரணத்தில்தான்.

அன்புடன் புகாரி said...

//" இருப்பதாய் நம்புவது..."

அந்த நம்பிக்கை தான் வாழ்க்கை...

அது இல்லாதவன் உயிரோடு இருந்தாலும் மரணித்தவன் தான்...///

மரணித்தவனுக்கும் மரண அவஸ்தையில் இருப்பவனுக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா சாந்தி? அதுதான் நிம்மதி!


மரணத்தில் நிம்மதி கிடைக்கும் என்பதே நம்பிக்கைதானேயொழிய அதன்பின் என்ன நடக்கும் என்பதே யூகம்தான்...

அடர் மௌனம் நிம்மதியேதான் சாந்தி.


அதைவிட, இவ்வுலகிலேயே பிறருக்காக வாழ்பவர்கள் அந்த நிம்மதியை சந்தோஷத்தை அடைதுவிடுகிறார்கள் என்பது என் எண்ணம்...


இது சிறு நிம்மதியாவது பெறமாட்டோமா என்று நாம் செய்யும் காரியங்கள்தானே இவை சாந்தி

மரணம் வரை காத்திருக்கவேண்டியதில்லை என்பதும் திண்ணம்...

இயன்றதை செய்யுங்கள். அதில் தவறே இல்லை. ஆனால் நீங்கள் முழுமைய அடையப்போவது மரணத்தில்தான்.

மல்லிகை வாணி said...

////மரணத்தில் நிம்மதி கிடைக்கும் என்பதே நம்பிக்கைதானேயொழிய அதன்பின் என்ன நடக்கும் என்பதே யூகம்தான்...


அதைவிட, இவ்வுலகிலேயே பிறருக்காக வாழ்பவர்கள் அந்த நிம்மதியை சந்தோஷத்தை அடைதுவிடுகிறார்கள் என்பது என் எண்ணம்...


மரணம் வரை காத்திருக்கவேண்டியதில்லை என்பதும் திண்ணம்... //


நல்ல கருத்து சாந்தி...:)


மரணம் கூட கடவுளைப் போலதான்...அவரவர் கருத்து அவரவர் வாழ்க்கை
அனுபவத்தையும் நம்பிக்கைகளையும் சார்ந்தே இருக்கும்...

சிலருக்கு மரணம் ஒரு பழைய அத்தியாத்தின் முடிவாக இருக்கலாம்...ஒரு சிலருக்கு அது ஒரு
புது அத்தியாத்தின் ஆரம்பமாக இருக்கலாம்...

எது எப்படியோ, மரணம் வரை காத்திருந்து கிடைக்கும் நிம்மதி அர்த்தமற்றது...:)


அன்புடன்...
வாணி

அன்புடன் புகாரி said...

//எது எப்படியோ, மரணம் வரை காத்திருந்து கிடைக்கும் நிம்மதி அர்த்தமற்றது...:)//


துயரத்தில் இருக்கும்போது இனி எது வந்தால் எனக்கென்ன என்று தோன்றுவது இயற்கைதான் வாணி. ஆனால் வந்ததும் அத்தனை துக்கமும் உதிர்ந்துபோகும்.

அன்புடன் மலிக்கா said...

மரணம் அதை தழுவுமுன் ரணம்
தழுவியபின் சுகம்

வாழ்க்கையின் பாதைகள் நீண்டுகொண்டே போனால் எப்போது முடிவடைவது,

தொடங்கும் எதற்குமே முடிவென்று ஒன்று உண்டு,

பிறப்பது இறப்பதும்
புதியது பிறப்பதும்
இயற்கையின் நீதீ
இதற்கு கட்டுபட்டுபட்டே ஆகனும்
மனிதஜாதி

மரணம்: பிறந்து வாழ்ந்ததிற்கான
சம்பளம்:

தாங்களின் இக்கவிதை தனிசுகம்

சாந்தி said...

///இது சிறு நிம்மதியாவது பெறமாட்டோமா என்று நாம் செய்யும் காரியங்கள்தானே இவை சாந்தி////

இல்லை.. ஆசான் அதில் வகைகள் உண்டு.. எனக்கு 50 % வாழ்வில் கிடைக்கவேண்டியது கிடைத்துவிட்டால் ஒரு பரிபூரண திருப்தியோடு அடுத்தவருக்காய் வாழ்வதில் சிலர் ஆனந்தம் கொள்கின்றனர்... ஒர் பார்வை அற்றவருக்கு ரோட்டை கடக்க உதவும்போது அவர்கள் நிம்மதிக்காகவா செய்கிறார்கள் என நினைக்கின்றீர்கள்..?.. ஒரு குழந்தை காரில் அடிபடாமல் காப்பாத்துவது?.. ஏழை ஒருவனுக்கு படிப்புக்கு உதவுவது?..கஷ்ட நேரத்தில் வார்த்தையால் மட்டும் ஆறுதல் தருவது..இப்படி எத்தனையோ.. எதிர்பார்க்காமலே செய்யும் பல உதவிகள் உண்டு... அதில் நிம்மதியை விட அடடா நம்மாலும் அடுத்தவனை மகிழ்விக்க முடியுதே எனும் பேரானந்தம் ஏற்படும்...

வாழும் நாட்களில் கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தாமல் மரணத்துக்காக காத்திருப்பவர் கோழைகளே... விதிவிலக்குகளும் உண்டு இல்லையென்று சொல்லவில்லை... இயலாதவர்களை விட்டுடலாம்.. எல்லாம் இருந்தும் மரணம் பற்றி சிந்திப்பவருக்கே என் கருத்துகள்...

அன்புடன் புகாரி said...

================
இல்லை.. ஆசான் அதில் வகைகள் உண்டு.. எனக்கு 50 % வாழ்வில் கிடைக்கவேண்டியது கிடைத்துவிட்டால் ஒரு பரிபூரண திருப்தியோடு அடுத்தவருக்காய் வாழ்வதில் சிலர் ஆனந்தம் கொள்கின்றனர்...
===================

பார்த்தீர்களா சாந்தி 50 சதம் போதும் என்று உடன்படிக்கைக்கு வருகிறீர்கள். பூரண நிம்மதியோ பூரண சந்தோசமோ எவருக்கும் இல்லை. அதுதான் உண்மை. அதை மரணமே தரவல்லது.


==================
வாழும் நாட்களில் கிடைத்த சந்தர்ப்பத்தை உபயோகப்படுத்தாமல் மரணத்துக்காக காத்திருப்பவர் கோழைகளே...
எல்லாம் இருந்தும் மரணம் பற்றி சிந்திப்பவருக்கே என் கருத்துகள்...
=========================

உங்களை மரணத்திற்காகக் காத்திருக்கச் சொல்லவில்லை அல்லது ஓடிப்போய் தற்கொலை செய்யச் சொல்லவில்லை. மரணத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஏனெனில் அது தரப்போவது பரிசுத்தமான நிம்மதியை. மரணம் ஒன்றே பூரண நிம்மதி.

ஒருவருக்கு எல்லாம் இருக்கிறதா இல்லையா என்பதை மற்றவர் முடிவு செய்யமுடியாது. அவரின் மனதுமட்டுமே முடிவு செய்யமுடியும். அவர்க் நிறைவடையாதவராய் இருந்தால் அவரின் நிம்மதி அவரிடம் இருக்காது. நீங்கள் எத்தனை முயன்றாலும் அதை உங்களால் நிரந்தரமாக அவருக்குத் தர முடியாது. அவரே அடைந்தால்தான் உண்டு.

மல்லிகை வாணி said...

///துயரத்தில் இருக்கும்போது இனி எது வந்தால் எனக்கென்ன என்று தோன்றுவது இயற்கைதான் வாணி. ///


100% உண்மை...

பல சமயங்களில் நமக்கு இருக்கும் கடமைகள்தான் நம் துன்பங்களைத்
தாண்டி நம்மை வாழச்செய்கிறது...


அன்புடன்...
வாணி

பூங்குழலி said...

//மரணத்தில் நிம்மதி கிடைக்கும் என்பதே நம்பிக்கைதானேயொழிய அதன்பின் என்ன நடக்கும் என்பதே யூகம்தான்... சிலருக்கு மரணம் ஒரு பழைய அத்தியாத்தின் முடிவாக இருக்கலாம்...ஒரு சிலருக்கு அது ஒரு புது அத்தியாத்தின் ஆரம்பமாக இருக்கலாம்...//

ரொம்ப சரியா சொனீங்க ..மரணத்திற்கு பின் என்ன என்பது வெறும் யூகமே ....நிச்சயமானது இந்த பொழுது மட்டுமே ,மரணத்திற்கு பின்னால் நாம் பேயாக அலையக்கூடும் என்பது நிஜமானால் அது நிம்மதியா ?

//இயன்றதை செய்யுங்கள். அதில் தவறே இல்லை. ஆனால் நீங்கள் முழுமைய அடையப்போவது மரணத்தில்தான்.//

இருக்கும் போது முழுமையடையாதவர்கள் இறப்பில் எவ்வாறு அதை அடைய முடியும் ?முழுமடைவதற்கான முயற்சிகளின் முடிந்து போவதால் மட்டுமே முழுமையடைந்ததாக சொல்ல முடியுமா ?

//அற்புதமானவர்களை ( கடவுள்களை ) இவ்வுலகிலேயே சந்தித்துவிட்டேன்..இனியொரு கடவுளைக்காண அந்த மெளனத்துக்காக காத்திருக்கப்போவதில்லை..

நீங்கள் சந்தித்தவர்களை நீங்கள் உயர்வென எண்ணுகிறீர்கள். அவர்களைக் கேட்டால்தனே உண்மை உங்களுக்கும் புரியும் :)///

உயர்ந்தவராக பிறரால் கருதப்பட்டாலும் தங்கள் நிலை தங்களை உணர்ந்தவர்களாக இருப்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் தானே ?

//மனம் மேன்மையானது அல்ல! மரணத்தில்தான் அது மேன்மையடையும். நிம்மதியைத் தழுவும்.//

மனம் மேன்மையானது இல்லை என்பதை விட நிலையானது இல்லை .ஆனால் மரணத்தில் அது மேன்மையடைவதில்லை .மரணத்தில் அது மறக்க அல்லது மன்னிக்கப் படுகிறது அவ்வளவே ....

மரணம் ஒரு முற்றுப் புள்ளி மட்டுமே

அன்புடன் புகாரி said...

கருத்துக்களுக்கு நன்றி பூங்குழலி,

===========
ரொம்ப சரியா சொனீங்க ..மரணத்திற்கு பின் என்ன என்பது வெறும் யூகமே ....நிச்சயமானது இந்த பொழுது மட்டுமே ,மரணத்திற்கு பின்னால் நாம் பேயாக அலையக்கூடும் என்பது நிஜமானால் அது நிம்மதியா ?
===============

நல்ல கேள்வி. எனக்கு மரணத்தின்பின் பேய் என்பதெல்லாம் பொய். என் கவிதை மரணத்தின்பின் மகா நிம்மதி என்றே கூறுகிறது. ஏற்பதும் ஏற்காததும் வாசிப்பவர்களின் விருப்பம். எதுவும் கட்டாயமில்லை கவிதையில்.

=============
இருக்கும் போது முழுமையடையாதவர்கள் இறப்பில் எவ்வாறு அதை அடைய முடியும் ?முழுமடைவதற்கான முயற்சிகளின் முடிந்து போவதால் மட்டுமே முழுமையடைந்ததாக சொல்ல முடியுமா ?
===========

முழுமையடையாமல் நீங்கள் மரணிக்கப்போவதே இல்லை என்பதே என் கவிதை.

===========
உயர்ந்தவராக பிறரால் கருதப்பட்டாலும் தங்கள் நிலை தங்களை உணர்ந்தவர்களாக இருப்பவர்கள் போற்றுதலுக்குரியவர்கள் தானே ?
==========

நிச்சயமாக எல்லோருமே போற்றுதலுக்குரியவர்கள்தாம். எல்லோரும் நல்லவரே. பிரச்சினை அதுவல்ல. நிம்மதிதான் பிரச்சினை. அது பூரணமாய் மலர்வது மரணத்தாயின் மடியில் விழும்போதுதான். தற்கொலை என்பது குறைப்பிரசவம்.

============
மனம் மேன்மையானது இல்லை என்பதை விட நிலையானது இல்லை .ஆனால் மரணத்தில் அது மேன்மையடைவதில்லை .மரணத்தில் அது மறக்க அல்லது மன்னிக்கப் படுகிறது அவ்வளவே ....
மரணம் ஒரு முற்றுப் புள்ளி மட்டுமே
===========

நிலையானதில்லை என்பதால் மனம் மேன்மையானதில்லை என்று கூறப்படுகிறது. எந்த மனிதருக்கும் மன்னிப்பு அவசியமே இல்லை. மரணம் மன்னிப்பு கேட்க உங்களிடம் காத்திருக்கிறது. நீங்கள் இங்கே வடிவமைக்கப்பட்டபோது கொண்ட துயரங்களுக்காக. உங்கள் தவறுகளுக்கு நீங்கள் நேரடியாய்க் காரணம் என்று நினைக்கத் தேவையில்லை. உங்களின் வடிவமைப்பே அதற்காக காரணம் என்று நம்பலாம். ஆம் மரணம் துயரங்களுக்கான முற்றுப்புள்ளி.

ஜெயபாரதன் said...

மரணம் ஓர் மீளா தூக்கம்
முள்ளாய்க் குத்தும் ஏக்கம்
விடிவே இல்லை அதற்கு
ஏசுவின் மரணம்
மகாத்மா காந்தியின் மரணம்
சாக்ரடிஸ் மரணம்
ஹிட்லரின் மரணம்
தற்கொலை மரணம்
மடி வெடி மரணம்
எல்லாம் ஒன்றா ?

பிறப்பும் இறப்பும்
இரவும் பகலும் போல்
மீள்பவையா ?
பிறந்தது இறக்கலாம்
இறந்தது பிறக்குமோ ?
பிறப்பது தாய்க் கருவில்
இறப்பது இப்புவியில்
கருப்பையில்
உயிர் விளக்கேற்றுவது அன்னை
இறுதியில்
ஒளியை அணைப்பது யார் ?


சி. ஜெயபாரதன்

அன்புடன் புகாரி said...

ஜெயபாரதன்,

மரணத்தைத் தழுவும்முன் எல்லாமும் துயரம்தான் துக்கம்தான் வேதனைதான். அது ஏசுவானாலும் காந்தியானாலும் ஹிட்லரானும் அப்படித்தான்.இறந்தது மண்ணில் பிறக்காது. அது மரணத்தின் மடியில் மட்டுமே பிறக்கும்.

அன்புடன் புகாரி

சிவா said...

///அந்த மௌனத்துக்குள்
மலர்ந்ததும்
நிகரில்லாத நிம்மதி///


உண்மை ஆசான் .. முற்றிலும் உண்மை.. இந்த வரிகள் என்னுடைய "மெளனம்" என்ற கவிதையை மீண்டும் வாசிக்க தூண்டியது..

துரை said...

அன்பின் ஆசானே

கவிதைக்குப் பொய் அழகு என்ற விதியின் (!) கீழ் மரணம் பற்றிய தங்கள் உருவகம் அருமை .

ஆனால் கவிதை தாண்டியும் தாங்கள் மரணம் பற்றிகூறும் உறுதியான கருத்துக்கள் கொஞ்சம் இடறுகிறது. :)

அது ஒரு உருவமில்லா / யாரும் அறியாத உருவமுள்ள ஒரு முற்றுப்புள்ளி .
அதைத் தாண்டி சென்று மீண்டவருக்கே அதன் குணமும் ? உருவமும் தெரியும் :)))

ஆனால் அந்த பாக்கியம் கொண்டவர் இந்த உலகில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை .

ஆனால் ஆசானோ அதன் சிறப்பு பற்றி விளக்கிக் கொண்டே போகிறீர்கள் :))))
[எடுத்த தலைப்பில் வெல்லத்துடிக்கும் போட்டியாளர்போல :) ]

ஜப்பானில் ”லிட்டில் பாயும்( LITTLE BOY) , ஃபேட் மேனும் ( FAT MAN) {அணுகுண்டுகள்} ஏற்படுத்திய தாக்கத்தைவிட மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கியது.,
”மரணமே சிறந்தது” என சாமியாரும் அவரது சீடர்களும் நூற்றுக் கணக்கில் மொத்தமாக தற்கொலை செய்துகொண்ட நிகழ்ச்சி .

தொடர்ந்து படிக்கும் அன்பர்கள் யாரும் சின்னஅளவில் மனசஞ்சலமோ / மரணமே நிம்மதி என்ற கருத்துக்குள் தன்னை இணைத்துக் கொண்டார்களேயானால் ( அதற்கும் இங்கே , இப்போது ஆள் உண்டு ) , அது இந்த இழைக்கு தோல்வியே ஆகும் .

அன்புடன் புகாரி said...

////தொடர்ந்து படிக்கும் அன்பர்கள் யாரும் சின்னஅளவில் மனசஞ்சலமோ / மரணமே நிம்மதி என்ற கருத்துக்குள் தன்னை இணைத்துக் கொண்டார்களேயானால் ( அதற்கும் இங்கே , இப்போது ஆள் உண்டு ) , அது இந்த இழைக்கு தோல்வியே ஆகும் ./////

மரணம் அத்தனை எளிதல்ல துரை. ஒருவனின் அறிவை அது வெற்றிகொள்ள வேண்டும். அது அத்தனை சுலபமல்ல.

மரணத்தைக் கண்டு பயப்படாதிருத்தலே நாம் அறியவேண்டிய அவசியமான கருத்து.

அதோடு மிக முக்கியமாக எல்லா துயரமும் ஓர் நாளும் ஓயும் என்று புரிந்துகொண்டு இருக்கும் நாட்களை இன்றே இப்பொழுதே வாழ்வோம் என்று இயன்றவரை மிகுந்த மகிழ்ச்சியாய் வாழ்வதே நான் இக்கவிதைத் தொடருக்கு உள்ளே பதுக்கிவைத்திருக்கும் ஞானம்.

மரணத்திற்குபின் நரகம் என்ற ஒன்றே கிடையாது. சொர்க்கம் மட்டுமே என்று ஒவ்வொரு கவிதையிலும் நான் அழுத்தமாக பதிகிறேன். அதை உணர்ந்தால். வாழும்போது கவலையற்று வாழலாம்.

அன்புடன் புகாரி

கவிஞர் துரை said...

///மரணம் அத்தனை எளிதல்ல துரை. ஒருவனின் அறிவை அது வெற்றிகொள்ள வேண்டும். அது அத்தனை சுலபமல்ல. ////

அன்பின் ஆசானே !
அதுபற்றிதான் நானும் சொல்லவந்தேன் .
அறிவு !! அதன் அளவும் புரியும் தன்மையும் ஆளாளுக்கு மாறக்கூடியது .
ஒரு சாதாரணமான , புரிதல் குறைந்த வாசகனின் / சிஷ்யனின் அறிவை , அவனது குருவின் (சரியாகப் புரியப்படாத என்றும் வைத்துக்கொள்லலாம் :) போதனை தோற்கடித்துவிடும் .

///மரணத்தைக் கண்டு பயப்படாதிருத்தலே நாம் அறியவேண்டிய அவசியமான கருத்து. ////

’’ காலனை வரச்சொல் , காலால் மிதிக்கிறேன் “ - கவி ஆசான் சொன்னது

” மரணத்தை துச்சமென மதி “
” மரணம் மண்ணுக்குச் சமம்” - எங்கள் ஆசான் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும்’

////அதோடு மிக முக்கியமாக எல்லா துயரமும் ஓர் நாளும் ஓயும் என்று புரிந்துகொண்டு இருக்கும் நாட்களை இன்றே இப்பொழுதே வாழ்வோம் என்று இயன்றவரை மிகுந்த மகிழ்ச்சியாய் வாழ்வதே நான் இக்கவிதைத் தொடருக்கு உள்ளே பதுக்கிவைத்திருக்கும் ஞானம்.////


இதற்குத் தலைவணங்குகிறேன் ஆசான்
அந்தத் தீர்வு நம் வாழ் நாளிளேயே நிகழவும் வாய்ப்புண்டு !
இதுவே தொடர்ந்துபோராட , நிற்காமல் ஓட தன்னம்பிக்கைத் தரும் !!

///மரணத்திற்குபின் நரகம் என்ற ஒன்றே கிடையாது. சொர்க்கம் மட்டுமே என்று ஒவ்வொரு கவிதையிலும் நான் அழுத்தமாக பதிகிறேன். அதை உணர்ந்தால். வாழும்போது கவலையற்று வாழலாம்.////


நிம்மதிதேடி அலையும் கூட்டம் , விடைதெரியாமல் திரியும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது இன்னும் .
--அது மரணத்தில் தான் இருக்கிறது என்ற தவறான புரிதலுக்கு அவர்கள் போய்விடக்கூடாதே என்பதே நமது எண்ணம்

அன்புடன் புகாரி said...

///போதனை தோற்கடித்துவிடும் ///.


துரை,

என்னுடையவை போதனைகள் அல்ல. உண்மையறிதல். என் காதல் கவிதைகள் எப்படி காதல் பேசுகின்றனவோ அதுபோலவே மரணத்தின் அனுமானங்களை கவிதையாய்ப் பொழிகின்றன இக் கவிதைகள்.

நான் செத்தால்தான் எனக்கு நிம்மதி என்று நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட ஒருநாள் புலம்பிவிடுவார்கள். அதை எல்லாம் கேட்டு யாரும் செத்துப்போவதில்லை. அதோடு நீங்கள் தற்கொலை என்ற பயம்னொண்டு பேசினீர்கள் என்றால், என் கவிதையில் அதை கருச்சிதைவு மற்றும் குறைப்பிரசவம் என்கிறேன். அது மேலும் வேதனை என்பதல்லவா பொருளாகும். மரணத்தாய் அள்ளி அணைக்கும் நிலைப்பாடே இல்லை அல்லவா?

////’’ காலனை வரச்சொல் , காலால் மிதிக்கிறேன் “ - கவி ஆசான் சொன்னது

” மரணத்தை துச்சமென மதி “
” மரணம் மண்ணுக்குச் சமம்” - எங்கள் ஆசான் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும்’ ////

இதெல்லாம் ஸ்டேட்மெண்ட் கவிதைகள். அந்தக் கால நடை. இன்று மனதோடு உறவாடி மனதோடு பேசி நட்போடு கூறிச்செல்லுதல் வேண்டும். தன்னை ஒரு கொம்பனாக நிறுத்திக்கொண்டு கவிதை பாடுதல் அறுந்துபோய்விட்டன. அவை இன்றெல்லாம் கவிதையாகக் கொள்ளப்படுவதில்லை.

மரணம் மண்ணுக்குச் சமம் என்பது தவறு என்பது வேறு விசயம்!

////அதோடு மிக முக்கியமாக எல்லா துயரமும் ஓர் நாளும் ஓயும் என்று புரிந்துகொண்டு இருக்கும் நாட்களை இன்றே இப்பொழுதே வாழ்வோம் என்று இயன்றவரை மிகுந்த மகிழ்ச்சியாய் வாழ்வதே நான் இக்கவிதைத் தொடருக்கு உள்ளே பதுக்கிவைத்திருக்கும் ஞானம்.


இதற்குத் தலைவணங்குகிறேன் ஆசான்
அந்தத் தீர்வு நம் வாழ் நாளிளேயே நிகழவும் வாய்ப்புண்டு !
இதுவே தொடர்ந்துபோராட , நிற்காமல் ஓட தன்னம்பிக்கைத் தரும் !!////

மரணம் பற்றிய என் கவிதைகள் தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவே நான் கருதுகிறேன் - நரகம் என்று பூச்சாண்டி காட்டாமல்.

மரணத்திற்குபின் நரகம் என்ற ஒன்றே கிடையாது. சொர்க்கம் மட்டுமே என்று ஒவ்வொரு கவிதையிலும் நான் அழுத்தமாக பதிகிறேன். அதை உணர்ந்தால். வாழும்போது கவலையற்று வாழலாம்.

/// நிம்மதிதேடி அலையும் கூட்டம் , விடைதெரியாமல் திரியும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது இன்னும் .
--அது மரணத்தில் தான் இருக்கிறது என்ற தவறான புரிதலுக்கு அவர்கள் போய்விடக்கூடாதே என்பதே நமது எண்ணம் ////

புதிதாகப் போக ஒன்றுமே இல்லை துரை. அது ஏதோ எவருக்கும் தெரியாத தேவரகசியம் என்பது போல எண்ணி கலங்குகிறீர்கள். சிறுவன் முதல் முதியவர் வரை அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த ஒரு விசயம். எல்லோரும் கவலையிலும் துயரில் சொல்லும் ஒரு விசயம்.

அன்புடன் புகாரி

துரை said...

அன்பின் ஆசானே

மரணம் பற்றி நாங்கள் (விபரமறியாதவர்கள்) பேசினால் வெறும் பிதற்றல் என ஒடுக்கி / ஒதுங்கி விடுவார்கள் .

ஆனால் சொல்வது ஆசான் !
தனது சொல்லின் பலம் / வீச்சு அறியாத எங்கள் ஆசான் !

இந்தச் சிரியவனையே ஒரு நிமிடம் அப்படியும் இருக்குமோ நின்று யோசிக்க வைத்துவிட்டது :(


”சாமானியன் யோசிக்காம
சடக்குன்னு முடிச்சிக்கிடுவான்
அவன் சோலிய “

-தவறுதலாய்ப் புரிந்து ., தவறாக முடிவெடுப்போர் சங்கத்தின் முதல் உறுப்பினர் நான்தான் என்ற வகையில்
நான் என்ன செய்ய வேண்டும் புரியவில்லை ஆசானே !
(குழப்பமா இருக்கே :( )

சக்தி said...

அன்பின் நண்பர்களே !

கருத்தாடல்கள் அருமையாக இருக்கின்றன.

நண்பர் ஜெயபாரதனின்,


>> பிறப்பும் இறப்பும்
இரவும் பகலும் போல்
மீள்பவையா ?
பிறந்தது இறக்கலாம்
இறந்தது பிறக்குமோ ?
பிறப்பது தாய்க் கருவில்
இறப்பது இப்புவியில்
கருப்பையில்
உயிர் விளக்கேற்றுவது அன்னை
இறுதியில்
ஒளியை அணைப்பது யார் ? >>


வரிகளை ரசித்தேன்

அன்புடன்
சக்தி

அன்புடன் புகாரி said...

நல்லது சக்தி. இக்கவிதைகளின் மூலம் நான் உங்களையும் நோகடித்தால் அதற்காக வருந்துகிறேன் சக்தி. நான் வேறொரு தளத்தில் நின்று இவற்றை எழுதுகிறேன்.

இளமை மிளிரும் காதல்கவிதைகளை இடும் அதே நாளில் மரணம் பற்றி எழுதுகிறேன். இதுதான் பாரதி சொன்னதோ என்னவோ

காதல் காதல் காதல் காதல் போயின் காதல் போயின் சாதல் சாதல் சாதல்

அன்புடன் புகாரி

கமலம் தாணுமாலயன் said...

"All that live must die, passing through nature to eternity." என்று
வில்லியம் ஷேக்ஸ்பியர் கூறியது நினைவுக்கு வருகிறது.

கமலம் தாணுமாலயன்