செழுமைகள் கூத்தாடும்
செங்கமலத் தீவு
எழுகின்ற மழைபோல
எல்லாமும் வனப்பு

விழிமுற்றும் ஈர்ப்பது
விரிபட்டுச் சேலையோ
ஒளிநெற்றிப் புருவத்தின்
சங்கமச் சோலையோ

கரைமுட்டும் அலையாக
கண்ணுக்குள் மாங்கிளி
தரைதொட்ட முந்தானை
தளிர்விட்ட பூங்கொடி

விரல்பூட்டிக் கால்கட்டி
வீற்றிருக்கும் தீபமே
விலகாமல் உயிருக்குள்
உயிரருந்தும் தாகமே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

சிவா said…
விழிமுற்றும் ஈர்ப்பது
விரிபட்டுச் சேலையோ
ஒளிநெற்றிப் புருவத்தின்
சங்கமச் சோலையோ


அருமை ஆசான் .. வித்தியாசமான வரிகள்
ஆயிஷா said…
ஆமாம் சிவா. ஆசானின் வித்தியாசமான படைப்பு இது. கவிநயம் அழகு.
அன்புடன் ஆயிஷா
சாந்தி said…
விழிமுற்றும் ஈர்ப்பது
விரிபட்டுச் சேலையோ
ஒளிநெற்றிப் புருவத்தின்
சங்கமச் சோலையோ

சிறப்பான சொல்லாடல்..கரைமுட்டும் அலையாக
கண்ணுக்குள் மாங்கிளி
தரைதொட்ட முந்தானை
தளிர்விட்ட பூங்கொடி

விரல்பூட்டிக் கால்கட்டி
வீற்றிருக்கும் தீபமே
நிறைவான சுகம்பெற்று
நீடூழி வாழ்கவே
நல்ல வாழ்த்தும்..
வேந்தன் அரசு said…
விழிமுற்றும் ஈர்ப்பது
விரிபட்டுச் சேலையோ
ஒளிநெற்றிப் புருவத்தின்
சங்கமச் சோலையோ

சிறப்பான சொல்லாடல்..
பூங்குழலி said…
விழிமுற்றும் ஈர்ப்பது
விரிபட்டுச் சேலையோ
ஒளிநெற்றிப் புருவத்தின்
சங்கமச் சோலையோ
கரைமுட்டும் அலையாக
கண்ணுக்குள் மாங்கிளி
தரைதொட்ட முந்தானை
தளிர்விட்ட பூங்கொடி

ரொம்ப ரொம்ப அழகான கவிதை

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்