குறள் 1084 கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்


இதென்ன முரண்பாடு
பெண்மையெனும்
மென்மை அழகை
பரிபூரணமாய்க்
கொண்டிருக்கிறாள் இவள்
ஆனால்
இவள் கண்களோ
காண்போரின்
உயிர் உண்ணும்
தோற்றத்தையல்லவா
கொண்டிருக்கின்றன

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண்3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1084

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

No comments: