சிலுவையில் அறைபட்ட இதயம்

சிலுவையில்
அறைபட்ட இதயம்
என் சிறகுகள்
தீபட்டுச் சிதையும்

அழுகையில்
கரைந்தே அழியும்
என் ஆயுளும்
முடிந்தால் தெளியும்

கழுவினில் ஏறிய உயிரிது
தினம் கனவினிலும்
எரிகிற பயிரிது

விழுவதும் எழுவதும்
இயற்கை
என் வீழ்ச்சிக்கு இல்லை
இறக்கை

3 comments:

சிவா said...

வலி மிகுந்த கவிதை ஆசான் ... :(

ஆயிஷா said...

பாடல் வரிகள் போன்று உள்ளது. திருடத்தான் வேண்டும்.
அன்புடன் ஆயிஷா

சீனா said...

கவலைகள் தீரும் - வாழ்க்கை வாழ்வதற்கே - விழுவதும் எழுவதும் இயற்கை - இறக்கை இல்லை எனினும் வீழ்ந்தவன் நிச்சயம் எழுவான்.

கவலைகள் திருடப்படுவதில்லை - அவைகள தானாகத்தான் குறையும் மறையும்

நல்வாழ்த்துகள்