அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவாஎந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா


அது ஓர் அழகான கிராமத்தின் மரங்கள் வரவேற்கும் வீதி. நம் கதாநாயகன் இளமை அழகு நிரம்பித் ததும்பி வழியும் ஒரு வாலிபன். துக்கத்தைத் தன் முகத்தில் மேட்டூர் அணை வெள்ளமாய்த் தேக்கிவைத்து மனம்போன போக்கில் வெறுமையின் தாலாட்டுக்கு ஏற்ப மெல்ல நடந்துவருகிறான்.

அவன் யாரென்று அறியாத அந்த ஊர்வாசி ஒருவன் அவனிடம் விசாரிக்கிறான். இன்றைய நகரம் போலல்ல அன்றைய கிராம வாழ்க்கை. ஓர் ஊரில் ஒருவன் புதியதாய் வந்தால் அந்த ஊர் சிறுவர்களுக்கும் தெரிந்துவிடும் இவன் புதியவனென்று. தம்பி நீ எந்த ஊருப்பா என்று சட்டென்று வினவும் வெகுளித்தனமும் கொண்டவர்கள் அவர்கள். சில நேரம் அதில் விவகாரமும் இருக்கும். அது அந்தக் கிராமத்துக்கான பாதுகாப்பு.

அந்தக் கேள்விக்குப் பதிலாக, நம் கதாநாயகன் சொல்கிறான் இப்படி. என்னை எந்த ஊர் என்றவனே, நான் இருந்த ஊரைச் சொல்லவா? நான் இருந்த ஊர் எது? என் தாயின் கருவரை. ஆம் நான் முதன் முதலில் இந்த உலகில் வந்து இருந்த ஊர் என் தாயின் கருவரைதான். அங்கேதான் நான் பத்துமாதங்கள் வளர்ந்தேன் வாழ்ந்தேன். அதற்கு வாடகை நான் தரவில்லை. என்றால் அந்த ஊர் எனக்குச் சொந்த ஊரா?

அது என் சொந்தம் சொந்தம் என்றுதான் பிதற்றுகிறேன் என்றாலும் அந்த ஊரில் அதன் பின் வந்து குடியேறியவர்கள் இருக்கிறார்கள். பின் அவர்களுக்கும் அது சொந்தமாகி விடவில்லை. அந்த ஊர் எப்படி சொந்த ஊர் ஆகும்? நான் அங்கே வாடகை தராமல் குடிஇருந்தேன் அவ்வளவுதான். அதுதான் உண்மை. ஆனால் அந்த ஊரை நீயும் அறிவாய். ஏனெனில் நீகூட அந்த ஊரில்தானே பத்துமாதம் தங்கி இருந்தாய் என்கிறான்.

அந்த ஊர் நீயும்கூட அறிந்த ஊர் அல்லவா?

Comments

ஆயிஷா said…
ஓ.....இது தான் அர்த்த‌மா? அர்த்த‌ம் தெரியாம‌லே எத்த‌னை பாட‌ல்க‌ளை ர‌சிக்காம‌ல் விட்டுவிட்டேன்.

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ