சிதைவதா - மரணம் உன்னைக் காதலிக்கிறது


வெளிச்சம் இருளைக் கண்டு
பயப்படுவதைப்போல
மரணத்தைக்கண்டு மனிதன்
பயப்படத் தேவையில்லை
இருக்கும் நாட்களை இன்பமாய்
இன்றே இப்பொழுதே
அமைத்து வாழ்வதே வாழ்க்கை
எந்தச் சுழலிலும்
ஏதேதோ காரணங்கள் கூறி
சிக்கிச் சிதையாமல்
எக்கணமும் சுகம் தேடும்
இதயமே பெறவேண்டும்
மரணத்திற்குப்பின்
நரகம் என்ற ஒன்றே கிடையாது
நிரந்தர நிம்மதி என்ற
சொர்க்கம் மட்டுமே உண்டு

5 comments:

சாந்தி said...

> இருக்கும் நாட்களை இன்பமாய்
> இன்றே இப்பொழுதே
> அமைத்து வாழ்வதே வாழ்க்கை
> எந்தச் சுழலிலும்
> ஏதேதோ காரணங்கள் கூறி
> சிக்கிச் சிதையாமல்
> எக்கணமும் சுகம் தேடும்
> இதயமே பெறவேண்டும்


அருமை.. ஊக்கமும்..

Unknown said...

அந்த ஊக்கத்தைத் தருவது மரணம் பற்றிய தெளிவான சிந்தனைதான் சாந்தி

அன்புடன் புகாரி

இளங்கோவன் said...

இருக்கும் நாட்களை இன்பமாய்
இன்றே இப்பொழுதே
அமைத்து வாழ்வதே வாழ்க்கை

அன்பின் புகாரி...


இந்த மூன்று வரிகளில் நான் வாழ்வியலின் துளிரினை உணர்கின்றேன்..

ஊக்கம் தருகின்ற இந்த வரிகளுக்கு என்னுடைய நன்றிகள்

அன்புடன் இளங்கோவன்.

இளங்கோவன் said...

256 எழுத்துக்களில்...நீங்கள் எந்த எழுத்தைப் போட்டாலும்
வார்த்தைகள்... அரத்தமுள்ள கவிதையாகி... மனதை
தாலாட்டுகின்றதே...

வாழ்த்துக்கள் புகாரி சார்

அன்புடன் இளங்கோவன்.

சிவா said...

//ஊரறிந்தும் உன் வீடறியா நான்
என் வழிப்போக்கில்
உன் ஊர் வர நேர்ந்தால்
என்ன செய்வேன் //


கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும்


//பறவைகள் பூத்திருக்கும் பூங்காவில்
நான் வந்து காத்திருக்கிறேன்
என்று நீ இப்போதே வாக்களித்து
என்னைக் காக்கலாம் //


இது தேவலாம்

--
அன்புடன்
சிவா...
http://sivakumarz.blogspot.com