***6

உறவு

எனக்கு
என்னவேண்டும் என்று
உன்னிடம் கேட்டு நின்றேன்
செத்து மடிந்தேன்

உனக்கு
என்ன வேண்டும் என்று
என்னிடம் கேட்டு நின்றேன்
வாழ்கிறேன்

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

13 comments:

Anonymous said...

அன்பின் புகாரி - இருவருக்கும் பொருந்தும் கவிதை. புரிதல் என்று ஒன்று இருந்தாலே - துணையின் தேவைகளைப் புரிந்து கொண்டாலே - வாழ்க்கை இனிக்கும்.

அன்புடன் ..... சீனா

Anonymous said...

ஆசான் இது மாதிரியே எழுதி கொண்டிருந்தால்.. .எனக்கும் கூட திருமண ஆசை வந்து விடும் போலிருக்கிறது... நான் கொஞ்சம் கவனமாகவே இருக்கிறேன்.. கவிதை மிக அழகு

வேந்தன் அரசு said...

பிறர்க்கென வாழணும் என்ற கருத்து சிறப்பு

(ஆழம் தெரியாமல் காலை விடாதே)


--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

Unknown said...

மனமிறங்கி நமக்கென வாழ வருவாரே என்ற தன்னல எதிர்ப்பார்ப்பாயும் இருக்கலாமேங்கண்ணா

சாந்தி said...

இதில் முதலில் பிறர்க்காக ( அவளு/னுக்காக ) வாழ்ந்து செத்ததாயும், இப்ப தனக்காக வாழ்வதாயும் அர்த்தம் வருதோ?..

Unknown said...

நல்லா யோசிக்கிறீங்க. ஆனால் அது இல்லீங்க சாந்தி. என்னை மறந்துபோட்டு அவங்களையே கவனிப்பொம் அவங்க தேவையையே நிறைவேத்துவோம், அப்பால நம்மளயும் அவங்க கண்டுக்கமாட்டாங்களான்னு ஒரு நெனப்பாயும் இருக்கலாமுங்க!

துரை said...

தன்னை உணர்ந்தவன் பாக்கியவான்

உணர்த்திய ஆசானுக்கு நன்றி

Unknown said...

ஆமாம் துரை அவன் தன்னை உணர்ந்து தன்னால் இயலும் என்று முன் வருகிறான். பாராட்டுவோம் அவன் நம்பிக்கை வாழட்டும்!

பூங்குழலி said...

எல்லாம் உனக்காக ...அருமை

Unknown said...

நீ என்பதும் நான் என்பதும் வேறா வேறா என்ற தத்துவம்தான் பூங்குழலி

புன்னகையரசன் said...

எல்லா கோணங்களிலும் அழகான கவிதைகள்...

உங்கள போல இருக்கனும்னு பொறாமையா இருக்கு ஆசான்...

விசாலம் said...

நம் நலத்தைவிட பிறர் நலத்திற்காக வாழும் வாழ்க்கை மிகச்சிறந்தது

Unknown said...

மெழுகுவத்திகளும் ஊதுவத்திகளுமாய் பலர் இருந்தால் சிலர் சுகமாக வாழ்வார்களோ?