9

பிறந்ததும் ஏன் நாம் அழுகிறோம்
மண்ணுக்குப் பயந்தா
மனிதர்களுக்குப் பயந்தா

துக்கங்களால் ஆனதுதானா உலகம்
ஏன் நாம் நம் வாழ்வை
துக்கமாக ஆக்கிக்கொள்கிறோம்

எங்கிருந்து முளைக்கின்றன
துக்கம் தரும் ஆசைகள்
எங்கே இருக்கின்றன
அந்த ஆசைகளின் ஊற்றுகள்

உடம்புக்குள்
சிறைபட்ட உயிருக்கு
நிம்மதியே இல்லையா

உடம்புதான்
அனைத்திற்குமான கேடா

மரணம்தான்
அதற்கான மருந்தா
அல்லது மாற்றுவழி ஏதுமுண்டா

மரணம் உன்னைக் காதலிக்கிறது

3 comments:

shanthi said...

Maatru vazhi kandupithu, adhai yea oru kavidhai yaaga thaarungalaen Buhari

சீதாம்மா said...

விடையில்லா கேள்வி
சீதாம்மா

nidurali said...

காற்று வந்ததால் கொடி அசைன்ததா கொடி அசைன்ததால் காற்று வந்ததா!

பிறப்பு வந்ததால் மரணம் வந்ததா மரணம் வந்ததால் பிறப்பு வந்ததா!

சிந்திதததால் கவிதை வந்ததா கவிதை வந்ததால் சிந்தனை வந்ததா!

உலகம் வந்ததால் இறைவன் வந்தானா இறைவன் வந்ததால் உலகம் வந்ததா!