குறள் 0385 இயற்றலும் ஈட்டலும் காத்தலும்


வருவாய் வரும் வழிகளை
வெகு சிறப்பாய் அமைத்தலும்
வந்த பொருள்களைச்
சேமித்துக் காத்தலும்
காத்த செல்வத்தை
முன்னேற்ற வழிகளில்
திறம்படச் செலவிடுதலுமே
நல்ல ஆட்சியாகும்

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 385

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

2 comments:

கேசவன் .கு said...

/// வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை ///

அருமை புகாரி !

nidurali said...

இறைவன் உங்கள் பொருளையோ அல்லது உடலமைப்பையோக பார்பதில்லை. அவன் உங்கள் இதயத்தையும் உங்கள் செயல்களையும் தான் பார்க்கிறான்.
முஹம்மது நபி (ஸல்)