குறள் 0390 கொடையளி செங்கோல் குடியோம்பல்


ஏழைக்குப்
பொருள் அள்ளிக் கொடுப்பதும்
எதிரிக்கும்
கருணை அன்பு தருவதும்
தவறாமல்
நீதி நிலைநாட்டுவதும்
நலிவுற்றோரின்
நலம் பேணிக் காத்தலும்
ஆகிய நான்கும்
உடைய அரசன்தான்
அரசர்க்கெல்லாம்
ஒளிவிளக்கைப் போன்றவன்


கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி


2 பொருட்பால் - 1 அரசியல்
39 இறைமாட்சி - குறள் 390

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

2 comments:

nidurali said...

அள்ளவே குறைந்திடாத தெள்ளியதாய் தரும் கவிதை
எம் உள்ளத்தை உயர்த்தி இன்பமடையச் செய்த
உமக்காக அன்புடன் கனிந்து உள்ளம் உருகி
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கினறேன்.

nidurali said...

அள்ளவே குறைந்திடாத தெள்ளியதாய் தரும் கவிதை
எம் உள்ளத்தை உயர்த்தி இன்பமடையச் செய்த
உமக்காக அன்புடன் கனிந்து உள்ளம் உருகி
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கினறேன்.