குறள் 1085 கூற்றமோ கண்ணோ பிணையோ


உயிரைக் கொல்லும்
எமனா
காதல் பொழியும
விழியா
மிரண்டு நிற்கும்
மானா
இந்த இளையவளின்
பார்வை
இந்த மூன்றையும்
ஒன்றாய்க்
கொண்டிருக்கின்றதே

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து3 காமத்துப்பால் - 1 களவு இயல்
109 தகையணங்குறுத்தல் - குறள் 1085

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

1 comment:

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

தாடிக்காரனைப் போல ஒருவனும் காதல் சொட்டச் சொட்ட குறள் எழுத இயலாது. அதே போல் புகாரியைப் போல் ஒருவரும் இளையவளின் பார்வையை விவரிக்க முடியாது.

விளக்கம் அருமை
நல்வாழ்த்துகள் புகாரி