அன்புடன் - உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம்


உலகின் முதல் யுனித்தமிழ் குழுமமான “அன்புடன் குழுமம்” தொடங்கப்பட்ட அந்த பழைய நாட்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். அன்று நான் இட்ட மடலில் ஒன்று என் சேமிப்பில் சிக்கியது இன்று. இதுவே பெரும்பாலானவற்றை அழகாகச் சொல்வதாய்ப் படுவதால். இதை இப்போது இங்கே அப்படியே இடுகிறேன்.


கூகுளு கூகுளு கூகுளு - அட
குளுகுளு குளுகுளு கூகுளு
திஸ்கியும் பஸ்கிகள் எடுக்குது - இப்போ
தெனறித் தெனறிச் சாகுது


அன்பு இணையத்தோரோ குழும இதயத்தோரோ,

புகாரியின் வணக்கங்கள் மீண்டும்!

"க்க்க்க்க்றீச்ச்ச்ச்ச்... க்க்க்க்க்றீச்ச்ச்ச்ச்" நகரும் சத்தம் என்பது இதுதானா? அடடா எத்தனை இனிய ஓசை.... தேமதுரத் தழிழோசையின் தூதுகளா இந்த ஓசைகள்?

ம்ம்ம்.... எழுதிக்குவிக்கும் அத்தனையும் இனி தேடக்கிடைக்குமா? அடடா... அடடா... பாக்கியம்... பாக்கியம்.... வாழ்க தமிழ் (ஏம்பா... தமிழ் தெரியாதவனல்லாம் வாழ்க் தமிழ் சொல்றீங்க என்று புகைச்சலா.... நான் தொண்டனைய்யா... தொண்டன்.... ஆளை விடுங்கள்)

இரண்டே பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டன இரண்டுமே, ஆர்வலர்களின் வேட்டுக்குப் பலியாகிப்போய்விட்டன.

நண்பர் எழில்நிலா மகேனுக்கு நான் பிரத்தியேகமாக நன்றிசொல்லவேண்டும். நான் யுனிகோடை முதன் முதலில் பார்த்தது அவரின் வலைத்தளத்தில்தான். நான் கனடா வந்தநாள் முதலாகவே இவர் என் இனிய நண்பர். ஈழத்தமிழர்.

என்னிடம் மூன்று கணினிகள் இருந்தும், 98 இல்லை. மகேன் உதவமுன்வந்தார். தன் கணியொன்றில் 98ஐ இட்டு சோதனையில் வெற்றிகண்டார்.


* எழில் நிலா மகேனின் மடலிலிருந்து:

Windows 98 பாவித்து Gogle Group ல் யுனிகோட் தமிழில் மின்னஞ்சல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். Windows 98 ல் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் 6.0 ம் எக்ஸ்புளோரர் 6.0 ம் இருந்தால்... (Outlook Express Ver.5.0, Explorer Ver. 5.0 வைத்திருப்பவர்கள் மிகவும் இலகுவாக மேலான பதிப்புக்களுக்கு மாறிக்கொள்ளலாம். இலவச தரவிறக்கம் Microsoft ல் உண்டு)

1. Windows 98 ல் Google Group பக்கங்களை தமிழ் யுனிகோடில் பார்வையிடலாம்.

2. Windows 98 ல் Google Group ன் அஞ்சல் தளத்தில் அஞ்சல்களை யுனிகோட் தமிழில் பார்வையிடலாம். அஞ்சல்களை அனுப்பலாம்.

3. Windows 98 ல் Outlook Express 6.0 ற்கு வரும் தமிழ் யுனிகோட் அஞ்சல்களைப் படிக்க முடியும். அஞ்சல்களை அனுப்ப முடியும்.

ஆனால் யுனிகோடில் தமிழை உள்ளிடுவதற்குத்தான் இ-கலப்பை பாவிக்கும் முறையை இங்கு எங்குமே நடைமுறைப்படுத்த முடியாது. சுரதாவின் வலைப்பக்க 'புதுவை தமிழ் தட்டெழுதியைப்' பாவித்து தமிழை தட்டெழுதி பின்னர் வெட்டி ஒட்டும் முறையைத்தான் இங்கு எதிலும் பயன்படுத்த முடியும். http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

எனது பரிசோதனை அஞ்சல்களைப் பார்வையிட.. http://groups-beta.google.com/group/anbudan

*

அடுத்து நானறிந்த யுனிகோடு வல்லுனர் உமர்தான். பணிச்சுமையால் தள்ளாடியபோதும் இரண்டே தினங்களில் செவிமடுத்தார்.

* கணிஞர் உமர் மடலிலிருந்து

ஏன் ஒடிகின்றன வரிகள்?

1. எழுதுவதற்கான பகுதியை வரிக்கு இத்தனை எழுத்துக்கள்தாம் கொண்டிருக்க வேண்டும் என்று நிர்ணயித்திருப்பார்கள்(எடுத்துக்காட்டாக 60 எழுத்துக்கள்). மேலும் monospace எழுத்துக்களாக இருக்க வேண்டும் என்றும் குறிக்கப் பட்டிருக்கும்.

யுனிகோடு அஞ்சல்களை 1252 அல்லது ISO-8859-1 "கேரக்ட்டர் செட்" களில் பார்க்கும்ப்பொது அதன் அளவு பெரிதாக இருப்பதை அவதானித்திருக்கலாம். எடுத்துக் காட்டாக "அன்பின் இணையத்தோரே" என்ற சிறிய சொற்றொடர்,

"தூஈஸதூஈனதூஉ஍தூஈபதூஈநதூஈனதூஉ஍
தூஈக்ஷதூஈணதூஉஜ்தூஈஉதூஈததூஉ஍தூஈததூஉக்ஷதூஈததூஈஊதூஉக்ஷ"

என்பதாகத் தெரியும் இது அந்த குறிப்பிட்ட 60 எழுத்துக்களுக்கு உள்ளிருந்தால் ஒரே வரியில் வந்துவிடும். அதற்கு மேற்படிருந்தால் கடைசியில் வரும் சொல் அடுத்த வரிக்கு மடிக்கப் பட்டுவிடும். (இந்த இடத்தில்தான் யுனிகோடு அதிக இடம் பிடிக்கும் என்ற வாதம் வலுப் பெறுகிறது)

2. ஒவ்வொரு வரி முடிவிலும் தானாகவே ஒரு carriage return சேர்க்கப்படுவது இன்னொரு காரணம். நாம் எழுதும்போது இதை உணர இயலாது ஆனால் அஞ்சல் போய்ச் சேருமிடத்தில் இதன் தாக்கம் தெரியும்.

*

அடுத்து மிகுந்த ஆர்வம் காட்டிய நண்பர்கள் இண்டிராம், முனைவர் நா. கணேசன், முனைவர் நா. கண்ணன் மற்றும் கவிஞர் இராஜ தியாகராஜன். அனைவருக்கும் நன்றி.

* இண்டி ராம்
சுரஜாவின் இணையப்பக்கத்தை டெஸ்க்டாப்க்கு இறக்கி அதில் தமிழில் எழுதமுடியும் இண்டர்நெட் இணைப்பு எப்போதும் இருக்கவேண்டுமில்லை

* முனைவர் நா. கணேசன்

இதுபோலவே, கோபியின் வலைப்பக்கத்திலும் தமிழ் (யூனிகோட்) எழுத முடிகிறது. http://www.higopi.com/ucedit/Tamil.html இன்று 400+ வலைப்பதிகளில் ஏராளமான பேர் எழுதுகிறார்கள்

*

சரி இனி நான் மேற்கொண்ட சோதனைகளின் பலனாய்க் கிடைத்தவை.

நண்பர் சத்தி சக்திதாசன் திஸ்கியில் ஒரு மடல் அனுப்பினார் கூகுள் உயிரெழுத்துக்கு (சோதனை ஓட்டம் துவங்கி ஓடிக்கொண்டிருக்கிறது உயிரெழுத்தில்). அதுவும் தெளிவாக வந்து சேர்ந்தது. ஆக 98 வாசிகளுக்கு இதுவும் ஒரு வழி. அவர்கள் யுனிகோடு தாவும்வரை முடங்கிப்போக மாட்டார்கள்.

யுனிகோடில் பூந்து விளையாட ஒரு ஜிமெயில் கணக்கு திறப்பது சாலச்சிறந்தது. ஆனால் கட்டாயம் இல்லை. நான் ஜிமெயில் பாவித்து, அவுட்லுக்கையே கழற்றிவிட்டுவிட்டேன். சொல் தேடும் வழிதருகிறதே ஜிமெயில் அதனால்தான். சட்டுச் சட்டென்று என் சேமிப்பிலிருந்து தேடி எடுக்கிறேன் மடல்களை திஸ்கியில் மாங்குமாங்கென்று எழுதி தொலைத்துவிட்டு நிற்கும் நிலையில்லை அங்கே.

நண்பர் திரு கோ. சந்திரசேகரன், சென்னைநெட்வொர்க்.காம்-இலிருந்து 'கல்கியின் விஷ மந்திரம்' என்ற ஒரு சிறுகதையை எத்தனை அழகாய் இட்டிருக்கிறார் பாருங்கள்

http://groups-beta.google.com/group/uyirezuththu

புதிதாக ஒருவர் 'அன்புடன்' குழுமத்திற்கு வந்தார். நீங்கள் இதையெல்லாம் செய்யவேண்டும் என்று ஒரு மடலிட்டேன். இப்போது யுனிகோடு எழுதி ஜமாய்க்கிறார். அவர் நேற்று ஒரு விசயம் என்னிடம் கேட்டார். என் சிரிப்பை என்னால் அடக்கவே முடியவில்லை 'புகாரி, திஸ்கியில் எப்படி எழுதுவது?'

நம்மவர்கள், ஒரு சின்னக் கவுத்துக்கட்டில் கிடைத்ததும் மல்லாந்துவிடுகிறார்கள். இன்னும் ஓரடி எடுத்துவையுங்கள், சொர்க்கம் என்றாலும் உறக்கத்தைக் கலைத்துக்கொள்வதில்லை.

http://groups-beta.google.com/group/anbudan சென்று பாருங்கள் மடல்கள் குவிந்துவிட்டன. ஏராளமான சோதனைகள் நானும் மகேனும் செய்திருக்கிறோம்.

மரபிலக்கியத்திற்காக 2004, ஜூன் கூகுளில் கணக்கு திறந்ததாகச் சொல்கிறார் மரத்தடி மதி. ஆனால் தன் முதல் சோதனை மடலை 2005 மார்ச் 16ம் தேதி இட்டிருக்கிறார். 9 மாதம் 10 நாட்களில் குழந்தையின் அழுகுரல் கேட்கிறது. சந்தோசமாய் இருக்கிறது. வாழ்த்துக்கள் மதி. முன்னோடி மதிக்கு என் மனம் திறந்த பாராட்டுகள்.

நான் 2005 மார்ச் மாதம் 6ம் தேதிதான் 'அன்புடன்' என்ற பெயரில் கூகுள் குழுமம் திறந்து சோதனையில் இறங்கினேன். இன்று அங்கே ஏகப்பட்ட உரையாடல்களையும் சோதனை மடல்களையும் காணலாம். அதோடு, உயிரெழுத்துக்கும் ஒன்று துவங்கி, சோதனை ஓட்டம் ஓடுகிறது. கானா இட்டு கலக்கிய ஆசாத்துக்கு நன்றி.

ஆனால் உயிரெழுத்து துவங்கி, உறுப்பினர்களை ஏற்றும்போதுதான் ஒரு விசயம் கண்டேன். அத்தனை உறுப்பினர்களுக்கும் மொத்தமாக அழைப்பு கொடுத்தேன். உடனே கூகுள் ஓடிவந்து, என்ன செய்கிறாய் என்றது. ஒவ்வொருவராக verify செய்து கொஞ்சம் கொஞ்சமாக உள்ளிடுகிறது. இதைத் தவிர்க்க, நானே பத்துப் பத்தாக உறுப்பினர்களை உள்ளிட்டு ஒரே மூச்சில் முடித்துவிடலாம். (இதனை மட்டுனர்களுக்காக எழுதுகிறேன்)

பிறகென்ன, கூகுளுக்குள் குளுகுளுவென்று நுழையத் தடையென்று எழுப்பப்பட்ட அனைத்தும் உடைத்து நொறுக்கப்பட்டுவிட்டன.

இணையத்தோரே குழுமத்தோரே பெட்டியைக் கட்டிக்கொண்டு புறப்படுங்கள். நான் புறப்பட்டு நாளாச்சு, என்னோடு அங்கே வந்து சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகமாச்சு.

என் 'அன்புடன்' உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது. பிரியம்போல் அங்கே சோதனை மடல்களை இட்டுக்கொள்ளுங்கள். அது உங்கள் குழுமம்.

நன்றி

அன்புடன் புகாரி


பிற்செர்க்கை: மரத்தடி க்ருபா

ஆனால் எந்த மையத்திலும் யூனிகோட் படிப்பதில் எந்த இடர்பாடும் இல்லை. அதாவது TSCII படிக்க வசதி இருக்கும் இடத்தில் யூனிகோட் படிக்க எந்த இடைஞ்சலும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் TSCII தெரியாத சில இடத்திலும் ஒருங்குறி ஒழுங்காகவே தெரிகிறது.

இணைய உலா மையங்களில் இடர்பாடு என்பது எழுத்துரு என்ற அளவில் மட்டுமே இருக்கும் விதத்தில், எந்த எழுத்துருவை நிறுவுவதிலும் ஒரே மாதிரி ப்ரச்சனைதான். இதை நிறுவ முடிந்தால் அதையும் முடியும்.

மிக முக்கிய ப்ரச்சனை (திட்டி) மறுமொழி அளிப்பது/பதில் சொல்வது/படைபுகள் அனுப்புவதில்தான். டிஸ்கியில் தட்டச்சடிக்க முடிந்துவிட்டால் பிறகு அதை ஒருங்குறிக்கு மாற்றுவது அவ்வளவு கடினம் இல்லைதானே?

6 comments:

கீதா said...

வாழ்த்துகள், மேன்மேலும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துகள்.

Anbu said...

மறக்க முடியுமா பழைய விசயங்களை!

யோசித்து பார்த்தா டிஸ்கியெல்லாம் மறந்து போச்சு!

இப்படித்தான் http://www.thamizham.net/ பொள்ளாச்சி நசன் விபரம் தெரியாம பழைய எழுத்துருவை உபயோகிச்சுகிட்டுருந்தாரு, அவரை ஒருங்குறிக்கு மாத்தி , இன்னிக்கு மனுசன் என்னம்மா கலக்கறாரு. கூகிள் நம்ம நண்பன் . அங்க நம்மாளுங்க நிறைய பேரு வேலை செய்யறாங்கன்னு நினைக்கிறேன். நல்ல ஆதரவு இன்னிக்கு வரைக்கும் கொடுக்கிறாங்க. வாழ்த்துக்கள் பகிர்ந்தமைக்கு,

அன்புடன்,
அன்பு

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

நமது அன்புடன் குழுமம் துவங்கிய வரலாறு படித்தேன். மகிழ்ந்தேன். இன்று ஆல் போல் தழைத்து வளர்ந்திருப்பது கண்டு மகிழ்கிறேன்.

நல்வாழ்த்துகள் புகாரி

செல்வா said...

அன்புள்ள புகாரி,

மீள்பதிவிட்டுப் பகிர்ந்தமைக்கு நன்றி.
வரலாறு அல்லவா!

அன்புடன்
செல்வா

பூங்குழலி said...

முதன்முதலாய் அறிந்து கொள்கிறேன் புகாரி ......பகிர்வுக்கு நன்றி

திகழ் said...

இப்பொழுது தான் இதைப் ப‌டிக்கின்றேன்.

வ‌ர‌லாற்றை என்னைப் போன்ற‌வ‌ர்க‌ள் அறிந்து கொள்ள‌ மீள்ப‌திவாக‌ இட்ட‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றிங்க‌