பிறவா
வரம் வேண்டும் என்று
யாசித்துக் கொண்டிருந்தேன்
சில பக்தர்களைப் போல
உனைக் காணும் முன்பெலாம்

ஆனால் இன்றெலாம்
இனியும் நான் பிறக்க வேண்டும்
பிறக்கும் முன்பே
நீ எங்கே பிறக்கப் போகின்றாய்
என்று அறிந்து
அங்கு மட்டுமே பிறக்க வேண்டும்
என்று உயிர் தவிக்கிறேன்

4 comments:

Anonymous said...

காதலியை மட்டுமே காதலிக்காதீர்! உலகத்தையே காதலிக்க முற்படுங்கள். ஒரே காதல் உண்மைக் காதல் புனிதக் காதல் எல்லாம் கற்பனையில் இனிக்கும்.
காதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அவ்வளவுதான்.68-ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக்கொண்ட- வெவ்வேறு நபர்களுடன் வாழ்ந்த அந்த ஜோடிகளப் பற்றிய தகவலை 68-ஆண்டுகளுக்குப்பின் பகுதியில்காண்க! எது உண்மை?

வெண்பா விரும்பி said...

சமீப காலமாக, அன்பர் புகாரி அவர்கள் சந்தவசந்தத்தில் ஏராளமான கவிதைகளை
இட்டு வருகிறார்கள். அவரை வாழ்த்தும் வகையில் சிறிய செய்யுளொன்று
தோற்றியது. பாடலில் குற்றம் இருப்பின், அவர் மட்டுமன்றி, ஏனையோரும்
பொறுக்க வேண்டும். நன்றி.
**********
**********
(வெண்பா)

தென்றல் அனையதண் செய்யுடரும் இன்புயர்ந்த
தென்றல் பகலாய்ந் திருப்போருள் - அன்ப
புகாரியார் பைந்தமிழ்ப் பூம்பொழிலுள் ஆங்கே
புகாரியாத் தம்பாப் பொழி.
**********
**********

பேராசிரியர் பசுபதி said...

நான் முன்பு எழுதி, அரங்கில் வாசித்தளித்த ஒரு வாழ்த்துப் பா.
======

கவிஞர் புகாரியின்
இரண்டாவது கவிதை நூல்
வெளியீட்டு விழா
டிசம்பர் 13, 2003
வாழ்த்துப் பா
---------------
மின்னிணைய மேகத்தில் மின்னலென எம்பி
. மின்சார மெல்லோசை மீட்டுமொரு கம்பி
அன்புடனே இதயத்தை ஆற்றும்கவி மாரி
. அறுசுவையில் பாச்சமையல் ஆக்கும்பு காரி

முன்னோரின் அன்புநெறி முத்துவிரி மஞ்சம்
. மூவிரண்டு பூதங்கள் முகிழ்மலராய்க் கொஞ்சும்
நன்னெறிகள் நயமுரைக்கும் நம்பிக்கைப் பேரி
. நல்லிணைய வாசகர்கள் நாடும்பு காரி

ஊடல்கள் கூடல்கள் தேடல்கள் பாடி
. உலகத்து நிகழ்வுகளை உன்னும்கண் ணாடி
பாடலிலே துள்ளிவரும் பலசந்த மாரி
. பழமைக்கும் புதுமைக்கும் பாலம்பு காரி

பசுபதி

mohamedali jinnah said...

உங்கள் கவிதை அருமை. முத்தாய்ப்புதான் மிக்க்க்க்க. நன்றி

ஒரு கவிதை யாவது எழுதாமல் உறக்கம் வராதோ!!!