இப்படியாய் வாழ்க்கை


வாழ்க்கை
ஓர் கண்ணாமூச்சியாட்டம்

கண்கள்
கட்டப்படும் போதெல்லாம்
மனசு திறந்துகொள்கிறது

மனசு கட்டப்படும் போதெல்லாம்
கண்கள் திறந்துகொள்கிறன

யாரைத் துறத்தினாலும்
அவர்களின் உள்மனம் மட்டும்
அகப்படுவதே இல்லை
அவர்களுக்கும்

கண்களைக் கனவுகள் மொய்க்க
உதடுகளில் கதைகள் மௌனித்திருக்க
நெஞ்சில் கனல் படுத்துக்கிடக்க
தனிமையை எடுத்துப் பூக்களாய் மாற்றி
கவிதைகளாய்ப் பொழிந்த வண்ணம்
உயிரெனும் சிறை வண்டு

2 comments:

mohamedali jinnah said...

நிச்சயமாக ஞானங்கள்(நன் நெறிகள்) கவிதைகளில் இருக்கிறது

-நபி மொழி

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

>> கண்களைக் கனவுகள் மொய்க்க
உதடுகளில் கதைகள் மௌனித்திருக்க
நெஞ்சில் கனல் படுத்துக்கிடக்க
தனிமையை எடுத்துப் பூக்களாய் மாற்றி
கவிதைகளாய்ப் பொழிந்த வண்ணம்

உயிரெனும் சிறை வண்டு >.

மீண்டும், மீண்டும் கிறங்க வைக்கும் வரிகள்

அன்புடன்
சக்தி