
மரணத்திடம் பாகுபாடுகள் இல்லை
மனித வாழ்க்கைதான்
பாகுபாடுகளுடையது
ஒருவன்
கொலை செய்யப்படுகிறான்.
ஒருவன்
தற்கொலை செய்துகொள்கிறான்.
ஒருவன்
நோயில் விழுந்து இறக்கிறான்.
ஒருவன்
முதுமை அடைந்து இறக்கிறான்.
இவை யாவும்
மண்ணில் நிகழும் மனித வாழ்க்கையின்
நிலையாமை தரும் பாகுபாடுகள்
மரணம் குறையற்றது
அது மனிதனுக்கு
எந்தத் துயரையும் தருவதில்லை.
துயரிலிருந்து
விடுதலை தரும் மரணத்திற்கு
துயரம் தரவேண்டிய
அவசியமும் ஏதுமில்லை
மரணம் உன்னைக் காதலிக்கிறது
1 comment:
இல்லையில்லை பாகுபாடில்லை மரணத்திற்க்கு.
மரணம் மனிதனை விரும்புகிறது
மரணத்தை விரும்ப
மனித மனம் மறுக்கிறது.
Post a Comment