10. அன்புடன் குழுமத்தின் பிறப்பைப் பற்றிச் சிறிது சொல்லுங்களேன்?லண்டன் கவிஞர் சக்தியின் கேள்விக்கு கனடா கவிஞர் புகாரியின் பதில்


நான் இணையத்திலும் குழுமங்களிலும் ஐந்து வருடங்களுக்கும் மேலாக எழுதி வருகிறேன்(2005 ல் எழுதியது). 2005 மார்ச் மாதம் வரை நான் உறுப்பினராகவும், மட்டுனராகவும், உரிமையாளராகவும் இருந்த இணையக் குழுமங்கள் எல்லாம் யாகூ குழுமங்களாகும். அங்கே திஸ்கியில்தான் எழுதிக் கொண்டிருந்தேன். என் வலைத்தளமும் திஸ்கியில் தான் இருந்தது. 2004ல் என் வலைத்தளத்தைப் புதியதாய் வடிவமைத்தபோது, அதை முழுவதும் யுனிக்கோடு தமிழாக மாற்றினேன். யுனிகோடு தமிழ் என்ற பெயரை யுனித்தமிழ் என்றும் பெயர்மாற்றி அழைக்கத் தொடங்கினேன்.

http://buhari.googlepages.com

அதே சமயம், ஜிமெயில் கணக்கு திறக்கும் அழைப்பு ஒன்று கவிஞர் மதுரபாரதியிடமிருந்து எனக்கு வந்தது. அதற்கு முன்பே ஜிமெயில் பற்றி அறிந்திருந்தாலும், கவிஞர் மதுரபாரதியின் அழைப்பு அதனுள் முழுமையாய்ச் செல்ல எனக்கு ஒரு தூண்டுகோலாய் அமைந்தது. ஜிமெயிலில் எந்த ஒரு மாற்றமும் செய்யாமலேயே யுனித்தமிழ் மடலாடல்கள் நிகழ்த்த முடியும். உடனே, நண்பர்களையும் இணைத்துக்கொண்டு ஜிமெயில் அஞ்சல் சேவை வழியாக மடலாடத் தொடங்கினேன். அது என்னை அப்படியே ஈர்த்து இழுத்து அணைத்துக்கொண்டது.

buhari@gmail.com

யுனித்தமிழில் வலைத்தளம், யுனித்தமிழில் அஞ்சல் இரண்டினையும் தொடர்ந்து யுனித்தமிழில் வலைப்பூ ஒன்றும் தொடங்கினேன். அதோடு நில்லாமல், அன்புடன் என்று கூகுள் குழுமம் ஒன்றையும் சோதனைக்காகத் தொடங்கினேன். தொடங்கியதும் பல சோதனைகள் செய்தேன். சோதனைகளில் வெற்றியும் பெற்றேன்.

http://groups.google.com/group/anbudan

"யுனித்தமிழ் - ஜிமெயில் - கூகுள் குழுமம்" என்று தலைப்பிட்டு தமிழுலகம் அறியும் வண்ணம் ஒரு கட்டுரையை எழுதி யாகூ குழுமங்கள் அனைத்திலும் இட்டேன். திண்ணை போன்ற இணைய இதழ்கள் பலவற்றிலும், TNF - தமிழ்நாடு அறக்கட்டளை அமெரிக்கா, FeTNA - அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, NTYO - வட அமெரிக்க இளைஞர் தமிழ் அமைப்பு, MTS - டல்லாஸ் மாநகர தமிழ்ச் சங்கம் ஆகியோர் இணைந்து வழங்கிய தமிழர் திருவிழா ஆண்டுமலரிலும் வெளியாகி இருக்கிறது.

"எப்படி யுனித்தமிழ் தட்டச்சுவது" என்ற தலைப்பில் யுனித்தமிழ் எழுதுவதற்கு எளிய முறையில் விளக்கங்கள் அளித்தேன். பலருக்கும் யுனித்தமிழ் எழுதக் கற்றுக்கொடுத்தேன்

இன்று அன்புடன் வளர்ந்து மாபெரும் யுனித்தமிழ்க் குழும மரமாய் வேர்களும் விழுதுகளும் கிளைகளும் இலைகளும் பரப்பி செழுமையோடு நிற்கிறது.

தினந்தோறும் பலரும் சேர்ந்த வண்ணமாய் இருக்கிறார்கள். யுனித்தமிழ் தட்டச்சவும் மடலாடவும் அறிந்தவண்ணமாய் இருக்கிறார்கள். செயல்பாட்டிலுள்ள உலகின் முதல் யுனித்தமிழ்க் குழுமம் என்ற பெருமை இதற்கு உண்டு.

16 comments:

நன்றி காமேஷ் said...

அருமை புகாரி சார்,

அப்படியா.. இப்படி தான் தொடங்கியதா கூகிள் குழுமங்கள்.

// யுனிகோடு தமிழ் என்ற பெயரை யுனித்தமிழ் என்றும் பெயர்மாற்றி அழைக்கத் தொடங்கினேன்.//

வாவ்


~காமேஷ்~

சாதிக் said...

வாழ்க புஹாரி சார்.... வளரட்டும் மென் மேலும் அவர் தம் சீரிய சேவை...

நா. கணேசன் said...

புகாரியின் 2005-ஆம் ஆண்டுக் கட்டுரை:

http://nganesan.blogspot.com/2009/12/buhari-fetna-2005-essay-on-anbudan.html


அன்புடன் தொடங்கிய பிறகே, இலந்தையாருடன் பேசி
இங்கே யாகூவிலிருந்து குடிபெயர்ந்தோம்.

--------

ஆல்பர்ட்டும், நானும் தினமணி ஆசிரியருடன் பேசி
நகர்த்தினோம். ஆள் மாறியிருக்கும் போல,
தினமணியில் யூனிகோட் வதை ஆகிறது - 3, 4 நாளாய்.

நா. கணேசன்

வேந்தன் said...

ஒருங்குறி என்ற இனிய தமிழ் சொல்லை யுனித்தமிழ் என மாற்ற கவிஞர்
துடிக்கிறார். தான் கண்டு பிடித்தசொல் என்பதால்

தமிழ் என்றும் 30 எழுத்துகள்தான். அதை கணினியில் சேமிக்க பயன்படும் எண்
முறை ஒருங்குறி. ஒருங்குறி ஒரு மொழி அல்ல.

த்ற்செயலாக எண் என்ற சொல் ”பைட்”டுக்கு நேர். என்னெனில், எண் எனில்
எட்டு. எட்டு எட்டாகத்தான் பயணமும்
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”

அன்புடன் புகாரி said...

//ஒருங்குறி என்ற இனிய தமிழ் சொல்லை யுனித்தமிழ் என மாற்ற கவிஞர்
துடிக்கிறார். தான் கண்டு பிடித்தசொல் என்பதால்//

வேந்தரே, யுனித்தமிழ் இன்று பழைய சொல். புழக்கத்தில் வந்து 5 ஆண்டுகள் ஆகப்போகின்றன. வலைப்பூக்களைப் பரப்புவதில் அதிக அக்கறை காட்டிய மாலன் போன்றோரெல்லாம் மகிழ்ச்சியாய் ஏற்று பயன்படுத்திய அழகு பெயர் :)


--

அன்புடன் புகாரி

http://anbudanbuhari.blogspot.com
http://buhari.googlepages.com

http://groups.google.com/group/anbudan

காமேஷ் said...

கணேசன் ஐயா,

உங்க மடல்களுக்கு நான் பதில் போடாததற்கு ஒரே காரணம்
எங்க ஊரில் இலவச Blogspot எல்லாம் blocked.

நீங்கள் கொடுக்கும் எந்த லிங்கையும் திறக்க முடியாது.~காமேஷ்~

நா. கணேசன் said...

நீங்களே ஒரு ப்லாக்ஸ்பாட் வலைப்பதிவு தொடங்கலாமே.
உங்கள் சீனா அனுபவங்களை ஒரு நாட்குறிப்பு போல,
வாரம் ஒருமுறை குறித்து வைத்தால் என்றும் இருக்குமே.
அப்படித் தொடங்கினால், http://tamilmanam.net ல்
இணைத்திடுக. 5 வருடம் முன்னால் 100 பதிவுகள்.
இன்று 7000! பலதும் மின்குப்பை என்றாலும், இளைஞர் பல்லோர்
தமிழில் எழுத முயற்சிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான
சமாச்சாரம்.

கணேசன்

அன்புடன் புகாரி said...

//அப்படித் தொடங்கினால், http://tamilmanam.net ல்
இணைத்திடுக. 5 வருடம் முன்னால் 100 பதிவுகள்.
இன்று 7000! பலதும் மின்குப்பை என்றாலும், இளைஞர் பல்லோர்
தமிழில் எழுத முயற்சிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான
சமாச்சாரம். - நா. கணேசன்//

முனைவரே,

பதிவுகளை கொஞ்சம் தரமானதாக ஆக்க, இந்த வார முத்திரைப் பதிவுகள் என்று ஒரு 10 பதிவுகளை தேர்வு செய்து பாராட்டும் அமைப்பு உருவாகலாம். தேர்வானவற்றை ஒரு வலைப்பூவில் தொகுக்கலாம்.

நா. கணேசன் said...

> முனைவரே,
>
> பதிவுகளை கொஞ்சம் தரமானதாக ஆக்க, இந்த வார முத்திரைப் பதிவுகள் என்று ஒரு
> 10 பதிவுகளை தேர்வு செய்து பாராட்டும் அமைப்பு உருவாகலாம். தேர்வானவற்றை ஒரு
> வலைப்பூவில் தொகுக்கலாம்.
>
> அன்புடன் புகாரி
>


பரிசீலனையில் இருக்கிறது :)

அன்புடன் புகாரி said...

ஆகா, மகிழ்ச்சி முனைவரே. மீண்டும் ஒட்டக்கூத்தரெல்லாம் கட்டியாண்ட தமிழ் இலக்கியமாய் இன்றைய நவீன தமிழ் படைப்புகளும் ஆகும்!

இராஜ தியாகராஜன் said...

அன்புள்ள கணேசன் அவர்களுக்கு
இராஜ.தியாகராஜனின் வணக்கம்

அன்று 2003/2004 ஆண்டுகளில் ஒருங்குறி என்பது கையளவே இருந்த காலகட்டத்தில்,
எழில்நிலா மகேன், புகாரி, அமரர் உமர்தம்பி, போன்றோர் ஒருங்குறியை எப்படி
எல்லாம் அலசினார்கள் என்று இப்போது எண்ணுகையில் மனமே மலைக்கிறது. அன்று
கூகுளில் தேடினால் வெறும் 100/150 பக்கங்களே வரும். நானும் என் பங்குக்கு
புதுச்சேரி தளத்தினை ஒருங்குறியில் உருவாக்க, ஒருங்குறி தானியங்கு
எழுத்துருக்களை பயன்படுத்தி 2004இல் வெள்ளோட்டங்கள் விட்டேன். தளம் முறையாக
வெளியானது மார்ச் - 2005. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. திரு பசுபதி
அவர்களும் நானும் நிறைய தடவைகள் யாகூ தளத்திலேயே ஒருங்குறியை கொண்டுவர நிறைய
முயற்சி செய்தோம். அன்றைக்கு கணினி தொழில்நுட்பவியலார்கள் அதைத் தடையற செய்ய
முடிந்ததே தவிர சாதாரணமாக ஏகலப்பை கொண்டு திஸ்கி பயன்படுத்துபவர்கள் விரைவில்
செய்ய இயலவில்லை. இன்று யாகூகூட முழுமையாக ஒருங்குறியை செயலாக்கம் செய்வதாகத்
தோன்றுகிறது. இலக்கியம் தாண்டி, கவிஞர் புகாரி, உங்களைப் போன்றவர்களின் பணி
மிகவும் சிறப்பானது என்பதில் ஐயமே இல்லை.

நீவிர் வளர்க வளங்களுடன்
அன்பன்
இராஜ.தியாகராஜன்.
WWW.PUDHUCHERRY.COM
WWW.TYAGAS.WORDPRESS.COM
WWW.THAMIZHMOZHI.BLOGSPOT.COM

வேந்தன் said...

----------
> வேந்தரே, யுனித்தமிழ் இன்று பழைய சொல். புழக்கத்தில் வந்து 5 ஆண்டுகள்
> ஆகப்போகின்றன. வலைப்பூக்களைப் பரப்புவதில் அதிக அக்கறை காட்டிய மாலன்
> போன்றோரெல்லாம் மகிழ்ச்சியாய் ஏற்று பயன்படுத்திய அழகு பெயர் :)
------------

பொன் குஞ்சு??

யுனித்தமிழ் 11, 000 ஹிட்டுகள்
ஒருங்குறி 27,000 தட்டுகள்

நா. கணேசன் said...

> யுனித்தமிழ் 11, 000 ஹிட்டுகள்
> ஒருங்குறி 27,000 தட்டுகள்
>


என் புரிதல்:

யுனித்தமிழ் = Tamil written in Unicode fonts

ஒருங்குறி = Unicode

அன்புடன் புகாரி said...

ஓ யுனித்தமிழ் 11,000 ஹிட்டுகளா?

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது வேந்தன். தகவலுக்கு நன்றி!

அன்புடன் புகாரி said...

மிகவும் சரி முனைவரே. ஒருங்குறி என்று நானும் பயன்படுத்துகிறேன், அது பொதுவில் வரும்போது. ஒருங்குறியில் தமிழ் என்று வரும்போது மட்டுமே யுனித்தமிழ்.

கவிஞர் சேவியர் said...

படைப்பு மட்டுமல்ல, போட்டோ அதை விடப் பிரமாதம் :)