மேன்மைகள் அனைத்தையும்
முழுவதும் பெற்றவனின்
அடிதொட்டுத் தொழாதவன்
காணும் கண்ணிருந்தும்
குருடன்போல்
கேட்கும் காதிருந்தும்
செவிடன்போல்
சிந்திக்கத் தலையிருந்தும்
மூடனாவான்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 9
வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை
3 comments:
எண்குணத்தான் என்பதை பற்றி ஏதேனும் சொல்லலாமே.
ஏனெனில் இங்கு இக்குறளில் எண்குணத்தான் என்பதை(யே) கோடிட்டு கட்ட வேண்டும் என்பது என் கருத்து.
பிச்சைமுத்து.
எண்குணம் என்பதை நம் விருப்பம்போலும் கொள்ளலாம்.
”மேன்மைகள் அனைத்தும் முழுமையாக பெற்றவென்” என்று நான் பொருள் கொள்ளும்போது அது காலத்தால் மாறாததாய் இருக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்று நினைத்தேன்.
அன்புடன் புகாரி
நன்று.
ஏற்றுக் கொண்டேன் புகாரி.
Post a Comment