*குறள் 0007 தனக்குவமை இல்லாதான்*

தனக்கோர்
நிகரில்லாதவனைத்
தொழாதார்
எவரும்
தம்மைத் தாக்கும்
துயர் துன்பம்
எவற்றினின்றும்
தப்பும்
வழி இல்லாதார்

*

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது

1 அறத்துப்பால் - 1 பாயிரவியல்
1 கடவுள் வாழ்த்து - குறள் 7

வல்லோன் வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலை

பின் குறிப்பு:

இஸ்லாத்தில் இறைவனுக்கு இணைவைப்பது கூடாது. இணையே இல்லாதவன் இறைவன் மட்டுமே என்று நம்புதல் வேண்டும். அதாவது இறைவன் ஒருவனே.

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்பதும் அவன் உயரத்திற்கு யாரும் அருளமுடியாது அன்பு தரமுடியாது என்ற தனித்துவத்தையே பேசுகிறது. ஆகவே அவனைத் தொழாவிட்டால் நம் பிணிகள் விலகாது, துன்பம் துயர் போகாது வாழ்வு சிறக்காது என்பது இதன் அடிப்படை.

ஆச்சரியமாய் வள்ளுவன் அதையே சொல்கிறான் இந்த 7வது குறளில்.

நான் இங்கே இஸ்லாத்திற்குப் பிரச்சாரம் செய்யவரவில்லை. தமிழ் இலக்கியத்தில் நான் கண்ட உண்மையைப் பகிர்கிறேன். என்னை மதவாதியாக யாரும் காணவேண்டாம். நான் அனைத்து நல்லவற்றையும் நேசிக்கும் மிதவாதி இணக்கவாதி அன்பாளன்.

அன்புடன் புகாரி
20171126

1 comment:

புலவர் அசோக் said...

நிச்சயமாக. திருக்குறளை எளிதாக புரியும் மொழியில், சுருக்கமாக புதுக் கவிதையில் கொண்டு வருவது சிறந்த முயற்சி. பாராட்டுகள்.