199101 சுஹைல் குட்டிக்கு செல்லக் குட்டிக்கு


குட்டிக்கு செல்லக் குட்டிக்கு
இன்று பிறந்தநாள் விழா
முத்தங்கள் அள்ளிச் சிந்துங்கள்
அந்தப் பிஞ்சுக் கன்னங்களில்

சின்னதாய் ஒரு சொர்க்கமாய்
வந்தப் பிஞ்சுதான் எந்தன் செல்லமே
பொன்னிலும் இல்லை பூவிலும் இல்லை
கண்மணி இவன் புன்னகை

(குட்டிக்கு)

ஆருயிர் அக்கா உன்னை
அள்ளி நெஞ்சில் சேர்ப்பாள்
தேனைச் சிந்தும் பூவைப்போலே
முத்தம் சிந்தித் தீர்ப்பாள்
தாயின் கண்களில் பூத்துநிற்குது
ஆனந்தப் பொன் பூக்கள்
பாடும் என்னுள்ளே ஆடிநிற்குது
தேன்வழியும் பாக்கள்

கையில் உன்னை அள்ள அள்ள
வாழ்வெனக்குக் கூடும்
கன்னங்களைக் கிள்ளக் கிள்ள
வாடும் உயிர் பூக்கும்

நீ தரும் முத்தம் ஒன்றே
என்றும் சொர்க்கமே

(குட்டிக்கு)

கோவிலில் உன்னைப் போலே
இல்லை ஒரு தீபம்
பூமியில் உன்னைப் போலே
இல்லை ஒரு ராகம்
வாய்மொழியவே தேன்நிலவுமே
உன்னைக் கண்டு ஏங்கும்
பாய்விரிக்கவே மாலைத்தென்றலும்
உன்னைக் கண்டு பாடும்

காலெடுத்து ஓடிவந்து
முத்து முத்தம் தாடா
கைவிரித்து ஆடிவந்து
கட்டிக் கொள்ள வாடா

ஆனந்தம் பொங்கும் இந்தப்
பொன்நாள் வாழ்கவே

(குட்டிக்கு)

*

சிட்டுக்கு சின்னச் சிட்டுக்கு என்ற திரையிசைப் பாடலின் மெட்டில் எழுதப்பட்ட பாடல். என் மகனுக்கான இரண்டாம் ஆண்டு பிறந்தநாள் பாட்டு.

2 comments:

காந்தி ஜெகன்நாதன் said...

அருமை புகாரி......

கவிஞர் சேவியர் said...

//கையில் உன்னை அள்ள அள்ள

வாழ்வெனக்குக் கூடும்
கன்னங்களைக் கிள்ளக் கிள்ள
வாடும் உயிர் பூக்கும்

//

பிரமாதம் !! பிரமாதம் !! பிரமாதம் !!

உங்கள் சுவர்க்கத்துக்கு எங்கள் வாழ்த்துக்கள்.