காதல் உயிரையே மென்று தின்பாய் என்று...


புத்தி வைத்திருந்தாய் பெண்ணே
ஆனாலதைக் கத்தியாக்குவாய்
என்றறியேனே கண்ணே

மனசு வைத்திருந்தாய் பெண்ணே
ஆனாலதையொரு தினுசாய் மாற்றுவாய்
என்றறியேனே கண்ணே

விழிகள் வைத்திருந்தாய் பெண்ணே
ஆனாலவற்றைப் புதை குழிகளாக்குவாய்
என்றறியேனே கண்ணே

முத்தம் வைத்திருந்தாய் பெண்ணே
ஆனால் உயிர் இரத்தம் குடிப்பாய்
என்றறியேனே கண்ணே

பேரழகாய் இருப்பாய் பெண்ணே
ஆனால் காதல் வேரழித்துப் போவாய்
என்றறியேனே கண்ணே

கண்மை இடுவாய் பெண்ணே
ஆனால் நீ உண்மை விடுவாய்
என்றறியேனே கண்ணே

கட்டியணைப்பாய் பெண்ணே
ஆனால் நீயே வெட்டி முடிப்பாய்
என்றறியேனே கண்ணே

உயிர் உயிர் என்பாய் பெண்ணே
ஆனால் காதல் உயிரையே மென்று தின்பாய்
என்றறியேனே கண்ணே

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

2 comments:

mohamedali jinnah said...

நீர் ஒரு காதல் மன்னன் கவிதை வரைவதில்.

mohamedali jinnah said...

காதல் கவிதைக்கு காரணம் உங்களுக்கு காதலி கிடைக்கவில்லையோ