18
மரணம் புனிதமானது
அது எப்போது வரும் என்று
எவராலும் சொல்ல முடியாது
மரண முடிவு இல்லாத ஒருவரும்
மண்ணில் கிடையாது
இறைவனைக்
காணவேண்டும் என்று
ஆத்திகர்கள் மட்டுமல்ல
நாத்திகர்களும் அலைகிறார்கள்
மரணத்தால் மட்டுமே எவரையும்
இறைவனின் மடிகளில்
கொண்டு சேர்க்க முடியும்
மரணம் உன்னைக் காதலிக்கிறது
3 comments:
அஸ்ஸலாமு அலைக்கும்,
பிறக்கும் பொழுது மறணம் நம்முடன் வருவதைக் காட்டும் கவிதை
நீர் ஒரு பிறவிக் கவி
தங்களுக்கு இறைவன் உயர்வான பதவிகளை நன்மையை வழங்குவானாக! ஆமீன்
அன்புடன்,
முஹம்மது அலீ.
நன்று.
மரணம் புனிதமானது //
புனிதம் என்பது நல்லோருக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு, ஆனால் இந்த புனிதம் கெட்டவர்களுக்கும்கூட கிடைக்கும் வாய்ப்பு.
மரணத்தால் மட்டுமே எவரையும்
கடவுளின் மடிகளில்
கொண்டு சேர்க்க முடியும்
மரணம் கடவுள் போன்றது //
மடிகளில் என்பது பன்மைதானே? அப்போ இது பல கடவுள்கள் நம்பிக்கையில் எழுதபட்ட கவிதையா? :-)
மடியில் என்பதுதானே சரி?
//புனிதம் என்பது நல்லோருக்கு மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு, ஆனால் இந்த புனிதம் கெட்டவர்களுக்கும்கூட கிடைக்கும் வாய்ப்பு.//
கெட்டவர்களுக்கும் கிடைக்கும் என்பதாலேயே அது புனிதமானது.
//மடிகளில் என்பது பன்மைதானே? அப்போ இது பல கடவுள்கள் நம்பிக்கையில் எழுதபட்ட கவிதையா? :-)
மடியில் என்பதுதானே சரி?//
நீங்கள் கடவுளை மனிதனாகக் கற்பனை செய்கிறீர்கள். நான் மடிகள் என்று சொன்னது அவனது கருணைக்குள் அருளுக்குள் என்ற பொருளில்
Post a Comment