தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.
தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.
வானூறி மழை பொழியும்
வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
பசியாறும் உரந்தையில்..... நான் பிறந்தேன்.
நெஞ்சிலும் தோளிலும் உரம் மிகுந்தவர்களின் நாடு உரத்தநாடு என்று சொல்வார்கள். சரபோஜி மகாராஜாதான் ஒரத்தநாட்டை ஆண்ட மன்னர்.
ஒரத்தநாட்டின் ராணி முத்தம்பாள் தன் உயிரைத் தந்து ஒரு புதையல் எடுத்ததாகவும், அதைக்கொண்டு 40 அன்ன சந்திரங்களை மன்னர் நிறுவியதாகவும் சொல்வார்கள்.
அதனால் ஒரத்தநாட்டிற்கு முத்தம்பாள் சத்திரம் என்றும் பெயருண்டு. அந்தக் காலத்தில் ஒரத்தநாட்டுச் சத்திரத்தில் வந்தோருக்கெல்லாம் இலவச உணவு உண்டு.
தற்போது அது ஏழை மாணவர்கள் படிப்பதற்கென்று மாற்றப்பட்டுவிட்டது. அதாவது எந்த செலவுமே இல்லாமல் பள்ளிப்படிப்பை ஏழை மாணவர்கள் இங்கே முடிக்கலாம்
சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்தான் நான் என் பள்ளிப்படைப்பை முடித்தேன். அரண்மனையின் சுவர் முழுவதும் நிறைத்த மகாராஜாவின் படம் இப்போதும் கம்பீரமாக அங்கே இருக்கிறது. அது பதினோராம் வகுப்புக்கான வகுப்பறையும்கூட
போர் வீரர்கள் பயிற்சிபெற்ற இடம்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம்.
அரணமனைக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். மகாராணி நீராடிய இடம்.
ஊரின் இருபக்கமும் இரண்டு பெரும் அரசுத் தோட்டங்கள். கீழத்தோட்டம் மேலத்தோட்டம் என்பார்கள்.
கீழத்தோட்டத்தில் மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை என்று சில பண்ணைகள் உண்டு. எனவே விலங்கினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு முழுவதும் எங்கள் ஊரில்தான்.
பல ஊர்களிலிருந்தும் பாலும் முட்டையும் கோழியும் வாங்க ஒரத்தநாடு வருவோர் பலருண்டு.
மேலத்தோட்டம் என்பது அருமையான இடம். உயரமாக புற்கள் முதல் பெரும் மரங்கள்வரை வளர்க்கப்படும்.
ஊருக்குச் சற்று வெளியே ஓடுவது கல்யாண ஓடை காவிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வந்து ஓடும் சிற்றாறு
ஒரத்தநாட்டைச்சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஒரத்நாடு தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர்கள்தான்.
எனவே என் ஊர் என்று தஞ்சையை அழைத்து என் நான்காம் தொகுப்பில் நான் எழுதிய கவிதை இது:
என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கிவிடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டிவைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?
வானூறி மழைபொழியும்
. வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
. தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
பசியாறும் தஞ்சாவூர்
தேரோடித் தெருமிளிரும்
திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
மதமோடி உறவாடும்
வேரோடிக் கலைவளரும்
விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
. பொன்னோடும் தஞ்சாவூர்
சேறோடி நெல்விளைத்து
ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
கண்ணோடிக் கறிசமைத்து
நீரோடி வளர்வாழை
நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
விண்ணோடும் தஞ்சாவூர்
வாய்மணக்கும் வெத்திலைக்கும்
வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
கைமணக்கும் பட்டுக்கும்
சேய்மணக்கும் சேலைக்கும்
சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
தரம்மணக்கும் தஞ்சாவூர்
தலையாட்டும் பொம்மைக்கும்
அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
சிலைகாட்டும் சோழனுக்கும்
மழைகூட்டும் மண்ணுக்கும்
பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
எழில்காட்டும் தஞ்சாவூர்
14 comments:
வெட்டிக்காட்டிலிருந்து வரும் பொழுது இந்த மேலத் தோட்டத்தின் அழகை ரசிக்கலாம்,ஆனால் இப்போ வெரும் கான்கிரீட் கட்டிடங்களைத்தான் காணமுடிகிறது.
முக்கியமா அண்ணாச்சி கடை அல்வாவைப் பற்றி ஒன்னுமே சொல்லலியே!!!
உங்களுக்கு சவரி நாதன் ஆசிரியரைத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்,அவரிடம் தான் நான் 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கு சிறப்பு வகுப்பு வந்து செல்வேன்.
தஞ்சாவூரைப் பற்றி நான் எழுதிய கவிதை இங்கே:
http://naadody.blogspot.com/2007/08/blog-post_20.html
வெட்டிக்காட்டுப் பாலத்திற்கு பலமுறை சென்றிருக்கிறேன் நாடோடி இலக்கியன்.
எனக்கு அண்ணாச்சிகடை அல்வாவைவிட மாக்கான் கடை சுண்டல்தான் அப்படியே இன்னமும் எச்சிலாய்ச் சுரக்கிறது :)
சவரிநாதன் சார்தான் எனக்கும் 10, 11ம் வகுப்புகளில் சில பாடங்களுக்கு ஆசியராய் வந்தார். ஆனால் அவர் மறைந்துவிட்டதாக குருமூர்த்தி சார் இப்போதுதான் சொன்னார்.
ஆமாம் உங்களுக்கு குருமூர்த்தி சாரைத் தெரியுமா? இணையம் மூலம்தான் அவரின் தொடர்பும் பல வருடங்களுக்குப் பின் கிடைத்தது. கீற்றில் சில கட்டுரைகளும் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.
காவிரிக்கரையோரம் என்ற உங்கள் கவிதை சொல்வதைத்தான் குருமூர்த்தி சாரும் சொன்னார். நன்றாக எழுதி இருக்கிறீர்கள் நாடோடி இலக்கியன்.
கல்யாண ஓடையில் நான் எத்தனைநாள் எதிர் நீச்சல் அடித்திருக்கிறேன் என்ற கணக்கே கிடையாது.
ஊரைப்பற்றி பசுமையான நினைவுகள் நிறைய உண்டு, எல்லாம் எழுதவேண்டும் என்று ஆசைதான். ஆனால் அவற்றை சொந்த ஊர்க்காரர்கள் மட்டுமே விரும்பி வாசிப்பார்கள் என்று அளவோடு நிறுத்திக்கொண்டேன்
என்னுடைய பொங்கல் கவிதைகளை வாசித்துப் பாருங்கள். நம் மூர்ப்பொங்கலை கொஞ்சம் எழுதி இருப்பேன். பொங்கல் என்ற தலைப்பின் கீழ் வரும்.
அன்புடன் புகாரி
நான் படித்தது வெட்டிக்காட்டிற்கு அருகேயுள்ள கருக்காடிப் பட்டி என்னும் ஊரில்,கணித பாடத்திற்கு மட்டும் சிறப்பு வகுப்பு ஒரத்தநாட்டிற்கு வருவேன்.அதனால் எனக்கு சவரிநாதன் ஐயா வை மட்டும் தான் தெரியும்.நீங்கள் எந்த வருடம் 10-ம் வகுப்பு படித்தீர்கள்?.
என்றால் நீங்கள் வெட்டிக்காட்டைச் சேர்ந்தவர்.
நான் ஒரத்தநாடு சந்தைப் பேட்டைக்கு மிக அருகில் வாழ்ந்தவன்.
கிட்டத்தட்ட சவரிநாதன்சார் ஒரத்தநாடு உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தபோதே அவரை நான் அறிவேன் :)
கல்லூரியெல்லாம் எங்கே படித்தீர்கள்?
நான் வெட்டிக்காட்டிற்கு 5 கி.மீ தொலைவில் உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவன்.பொங்கலைப் பற்றிய உங்களது கவிதையை படித்தேன் நன்றாக இருக்கிறது.
தற்போது நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள்.gmail id இருந்தால் கொடுங்களேன்.
நாடோடி இலக்கியன்,
anbudanbuhari@gmail.com என்பது என் மின்னஞ்சல் முகவரி
http://buhari.googlepages.com சென்றால் என் வலைத்தளமும் காணலாம். அது பல வருடங்களாக இயங்குகிறது. அது இயங்குவதால் நான் வலைப்பூவில் நாட்டமின்றி இருந்தேன். ஆனால் இவ்வாண்டு தீவிரமாக இறங்கிவிட்டேன்
நான் கனடாவில் வாழ்கிறேன் சோழத்தோழர்
அன்புடன் புகாரி
Nadodi I am from Krishnapuram. Neengalum Krishnapuram aa
கிருஷ்ணபுரம் வெட்டிக்காட்டிற்கு அருகில் இருக்கிறதா?
நீங்கள் யார்?
உங்கள் பெயர் கூறுங்களேன்
அன்புடன் புகாரி
தாய்பாசம் பிறந்த மண்வாசனை
நாடு விட்டு நாடு சென்றாலும் மறக்காமல் இருப்பது
மனித இயல்பு . அதற்கு தங்கள் கட்டுறை ஒரு முத்தாய்பு.
roma natkalukki piragu orathanad annachikadi alwa patriyum, makkan kadai mixer patriyum ithani silagithu pesuvathu avatrai meendum suvaithathupol ulathu. thanks for orathnad ninaivugal.
வாங்க ஒரத்தநாட்டுக்காரர் பத்மநாபன், இந்த நிமிடம் நம்மூரில் உலவ வேண்டும் என்ற ஆசை பிறக்கிறது. ஊர் வந்தால் உங்களைச் சந்திக்க வேண்டும். முகவரி அனுப்பி வையுங்கள்.
sila maathangaluku mun engal veetukku vantha thangalathu thayaar matrum thangalathu sakothari enathu thayaaridam angiratha oru padathai kaati keeta kelvi " enga buhariyum vairamuthu oda pugaipadam eduthirukku endru"
piraguthan theriya vanthathu thangalin kavithiran etc.,
i know all of you well(Mr.sahabeen, Mr.bagrudeen, Mr.Halith you, Madam Jarina, Mr.ghouse md, Sadiq, Mrs.thasleem,Ms.Nisha, Ms.Rishvana, Mr. ameen etc.,
padmanabhan.r., No22, Abiramapuram Second street, Thanjavur- 613 007
04362 -242119 Cell : 94431 08010
தங்கள் கவிதை மிக மிக அருமை.. வாழ்த்துக்கள் ..
தங்கள் கவிதை போல் ஒரத்தநாட்டு மக்களும்
நான் முன்னாள் விடுதலை புலி யில் இருக்கும்போது அன்று நான் குடித்த கஞ்சி இன்றும் என் நாவில் ருசிக்கின்றது
Post a Comment