முத்தத்தமிழ் நாளும்நான் செய்வேன்


இனிய இணையத்தோரே,

தமிழ்மணம் என்னையும் அழைத்தது. நட்சத்திரப் பதிவாளன் என்றது. தமிழ் வானத்தில் நானும் ஓர் ஒளிப் புள்ளியாய் மினுக்கலாம் என்று உடனே ஒப்புதல் தந்துவிட்டேன்.

உங்கள் பின்னூட்டங்கள்தான் என் முன்னால் நின்று என்னை எழுத்துக்குள் அழைத்துச்செல்லும் ஒளிமூட்டங்கள். ஆகவே அன்பு இணையத்தோரே நீங்கள் ஒவ்வொருவரும் ஓர் பின்னூட்டப் பிதாமகன் என்று அன்புடன் நிரூபியுங்கள்.

கொஞ்சம் தமிழ், கொஞ்சம் காதல், கொஞ்சம் புதுக்கவிக்குறள், கொஞ்சம் கனடா என்று சில கொஞ்சங்களைப் பஞ்சமின்றிப் பொழியலாம் என்று ஆசைப்படுகிறது இந்த நெஞ்சு.

முதலில் தமிழ்மணத்திற்கு நன்றி கூறும் முகமாக ஒரு சந்தக் கவிதை எழுதி இருக்கிறேன். எப்படி இருக்கிறதென்று தொட்டுத் தடவிப் பார்த்து நாக்கில் இட்டுச் சட்டென்று கூறுங்கள். நன்றி


மணமே தமிழ்மணமே

இணையத்தின் வெளியெங்கும் மணமே - தமிழ்
. .இதயங்கள் பூப்பூத்துக் கனியாகும் தினமே
அணையில்லாக் காட்டாற்று மனமே - தமிழ்
. .அமுதத்தால் நிறைகின்ற சுகமொன்றே சுகமே

இணையில்லாச் சேவைக்கோர் மணமே - தமிழ்
. .இடுகைகள் திரட்டிடும் வெற்றித் தமிழ்மணமே
முனைவர்கள் அறிஞர்கள் வாழ்த்த - தமிழ்
. .முதற்பெருந் திரட்டியே வாழ்க நீ வாழ்க

நட்சத்திரப் பதிவாளன் என்றாய் - எனை
. .நன்றித்தேன் நதியாக்கித் தமிழ்போல வென்றாய்
முத்தத்தமிழ் நாளும்நான் செய்வேன் - வலை
. .முற்றத்தில் கொட்டித்தினம் இச்சாகத் தருவேன்

32 comments:

butterfly Surya said...

போனவாரம் நண்பர் அப்துல்லா. இந்த வாரம் நீங்க.

அசத்துங்க..

வாழ்த்துகள் நண்பரே.

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் புகாரி..! கவிதை மழை பொழியட்டும்..!

தமிழ் said...

வாழ்த்துகள்

Unknown said...

உடன் வந்து வாழ்த்துச்சொல்லி ஆனந்தம் தந்த பட்டாம்பூச்சி சூர்யாவுக்கும் கலகலப்ரியாவுக்கும் என் நன்றிகள் பல!

அன்புடன் புகாரி

புன்னகையரசன் said...

ஆசான் = ஆசான்...
ஆரம்பமே சந்தமா.... கலக்குங்கள்... இனி பாட்டு பாராட்டு...
நல்லா இருக்கு ஆசான்... வாழ்த்துக்கள்...

vasu balaji said...

வாழ்த்துகள் புகாரி, தமிழ் மணத்தில் தமிழ்க் கவிதை மழை பெய்யட்டும்.

Unknown said...

நன்றி திகழ்
நன்றி புன்னகையரசன்
நன்றி வானம்பாடிகள்

thiyaa said...

வாழ்த்துகள் நண்பரே.
அசத்துங்க

என் சுரேஷ் said...

நல்வாழ்த்துக்கள் அன்பரே!!!!!!!!!

நட்சத்திரத்திற்கு நட்சத்திர அந்தஸ்து - இது என்றோ வந்திருந்திருக்க வேண்டும்.

நீ வாழ்க!

நான் மீண்டும் நட்சத்திரமான மகிழ்ச்சியில்...!!!!!!!!!!

பாசமுடன் என் சுரேஷ்

Unknown said...

அன்பின் சுரேஷ்,

நான் குழுமங்களில்தானே அதிகம் எழுதிக்கொண்டிருந்தேன். வலைப்பூக்களில் இந்த ஆண்டுதானே அதிகம் எழுதுகிறேன். அதன் காரணமாகவே எனக்குத் தாமதமாக நட்சத்திரம். தவறு என்னுடையது தமிழ்மணத்தினுடையது அல்ல சுரேஷ்.

உங்கள் வாழ்த்துக்கு நன்றி

அன்புடன் மலிக்கா said...

ஆசானுக்கு அசத்த சொல்லியாக்கொடுக்கனும்
ம்ம் யாரங்கே கொட்டுங்கள் முரசை இசையருவியாய் கவிமழை பொழியயும் கவிக்கு..

வாழ்த்துக்கள் கலக்குங்க..

மாதேவி said...

நட்சத்திர வாழ்த்துக்கள் புகாரி.

Unknown said...

நன்றி மலிக்கா,

இப்போதுதான் உங்களின் ”கவிக்காக ஒரு கவிதை” யை நீடூர் சீசன்ஸ் வலைப்பூவில் மீள்பதிவு செய்ததைக் கண்டு நுகர்ந்து பூரித்துவிட்டு வருகிறேன் :)

அதற்கு என் நெகிழ்வான நன்றிகள் உங்களுக்கு!

Unknown said...

தியாவின் பேனா இங்கே வந்து தீட்டியதற்கும்

மாதேவி (அட என்ன ஒரு பெயர்?) என்னை வந்து வாழ்த்தியதற்கும்

நன்றி நன்றி

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

அருமை அருமை கவிதை அருமை

சந்தக்கவிதை

முத்தத்தமிழ் நாளும்நான் செய்வேன் - வலை
. .முற்றத்தில் கொட்டித்தினம் இச்சாகத் தருவேன்

அற்புதம் அற்புதம்

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

Unknown said...

பெருஞ்சுவராய் வந்து வாழ்த்திய சீனாவுக்கு நன்றி

செல்வா said...

அன்புள்ள புகாரி,

நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

இனிப்பான செய்தி!

தமிழ்மணம்
விண்மீன் ஒள்ளோன் ஆனீர்!
வாழ்க!

அன்புடன்
செல்வா

Unknown said...

நன்றி பேராசிரியர் செல்வா அவர்களே

சத்ரியன் said...

//முத்தத்தமிழ் நாளும்நான் செய்வேன் ..//

புகாரி,

அதற்கெனத் தானே நம் "முத்தமிழ்" உன்னை மணம் வீச அழைத்திருக்கிறது.

புதியமாதவி said...

தமிழ்மணம் நட்சத்திர பதிவாளான் கவிஞன் என்பதில் மகிழ்ச்சி.
நல்ல மனிதன் என்பதால் வாழ்த்துகள்.
என் நண்பன் என்பதில் எனக்கும் பெருமை.

நட்புடன்,

மும்பையிலிருந்து
புதியமாதவி

Unknown said...

நன்றி தோழி புதியமாதவி

துரை said...

வாழ்த்துகள் ஆசான்

Unknown said...

நன்றி கவிஞர் துரை

mohamedali jinnah said...

பலபல துறையில் இலகிடும் கவிதை
கலையாய் வரையும் புகாரி வாழ்க!

Anonymous said...

பலபல துறையில் இலகிடும் கவிதை
கலையாய் வரையும் புகாரி வாழ்க!

திருவாரூர் சரவணா said...

தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். பதிவுகளை படித்த பின்பு அது தொடர்பாக பின்னூட்டம் இடுகிறேன். திருவாரூரைச் சேர்ந்த நான் இந்த உலகத்துக்கு புதுசு.

Ravichandran Somu said...

நட்சத்திர வாழ்த்துக்கள் கவிஞரே!!

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

Unknown said...

நன்றி நீடூரலியாருக்கும் சரணுக்கும்

செல்வன் said...

வாழ்த்துக்கள் புகாரி

ரிஷான் said...

நண்பருக்கு எனது நட்சத்திர வாழ்த்துக்கள் !

நா. கணேசன் said...

அன்பான புகாரி,

வணக்கம். தமிழ்மண விண்மீனாகச்
சுடர்விட வாழ்த்துக்கள்! ஆயிரக் கணக்கான
புதிய வாசகர்கள் உங்களுக்குக் கிடைப்பராக.
உங்கள் பெயரைப் பரிந்துரைத்து அனுப்பியிருந்தேன்.

தமிழின் முதல் கூகுள்குழுமம் ஆயிற்றே
‘அன்புடன்’ குழு. அதைத் தொடங்கியதிலும்,
நடத்துவதிலும் ஏற்பட்ட துய்ப்பறிவைப்
பற்றி ஒரு பதிவிடுங்கள். தமிழில் 10+ பேருக்கு
மேல் எழுதுகிற குழுக்கள் கூகுள்குழுக்களாய்
மாறிவிட்டன. கடைசியாக, தமிழ் உலகம்,
செல்வா (வாட்டர்லூ) அண்மையில் தமிழ் மன்றம்
என்னும் கூகுள் குழுக்கள் தோன்றியுள்ளன.

’அன்புடன்’ தோன்றியபின் சந்தவசந்தம்
குழுவை மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு
பலன்பெற்றோம், ஒருங்குறி பலம்பெற்றது.
அந்த இனிய அனுபவத்தை நான்
தமிழ்மண நட்சத்திரமாய் இருந்த வாரத்தில்
பதிவு செய்துள்ளேன் (2008 ’சனவரி முதல்நாள்).
கூகுளில் இணைக்குழு உருவாக்கம்:
http://nganesan.blogspot.com/2007/12/blog-post_31.html

2005 வாக்கில் இருந்த பெரிய பிரச்சினை என்னவெனில் மரபுக் கவிஞர்கள், யாகூ
குழுவின் முதலாளிகளுக்கும் கூட இணையத்தில் யூனிக்கோடு எழுதுகை என்பது
கைவசப்படாத வேளை. மேலும் யூனிக்கோடு மாறுகிறது என்று தமிழ்நாட்டின்
பத்திரிகைகளில் சில மாதங்களுக்கு ஒருமுறை செய்திகள் வெளிவந்த காலம்.
குறியீடு மாறிய பின்னால் மாறுங்கள் என்றும் சொன்னார்கள். அந்நிலையில்
யாகூகுழுவில் எழுதுவோர் எழுதட்டும், தானியங்கியாக நிழற்குழு கூகுளில்
அமைத்து அந்தத் திஸ்கி மடல்களை யூனிக்கோடுக்குப் பெயர்த்து இணைக்குழுவில்
வைப்போம் என்று நினைத்தேன். 'தமிழ்மணம்' காசி மென்கலம் தயாரித்து
உதவினார். அதற்கு உடனே அனுமதி அளித்து, தொழில்நுட்ப முன்னெடுப்புக்கு
ஆதரவு அளித்தவர் கவிமாமணி இலந்தை இராமசாமி ஆவார். மரபுக் கவிதைக் கடலைக்
கடக்கும் கப்பலாகச் சந்தவசந்தம் இலங்குகிறது. அதன் மீகாமன் இலந்தையார்.
பலரும் பாராட்டினர். கனடா நாட்டுக் கவிஞர் பேரா. அனந்தநாராயணனின்
வாழ்த்துப்பா நினைவில் இருக்கிறது :


பாரதம் நூலெழுதும் பங்கேற்றார் பண்டையொரு
வாரணம்; சந்த வசந்தக் கவிஞர்கள்தம்
பாரதம்செல் பாதை படைக்கக் கணேசனே
காரணமாய் நின்றார் களித்து!

----------------------------------------

அன்புடன் போன்ற கூகுள் குழுக்கள் பற்றிய
உங்கள் கட்டுரை ஃபெட்னா (http://fetna.org) விழாவில்
2005ஆம் ஆண்டு வெளிவந்தது:
http://indology2.googlepages.com/UnicodeTamil.pdf

வாழ்க வளமுடன்! வளர்க தமிழுடன்!
நா. கணேசன்

இலந்தை said...

தமிழ்மணப் பெருமை ஏற்க
சந்தத்தில் முதற்பா தந்தே
அமைவுடன் வந்திருக்கும்
அன்பருக்கு எமது வாழ்த்து

கமகம மணத்தினோடே
கவிதையில் காதல் ஏற்றித்
தமிழினை வழங்கும் அன்பர்
சாதனை சிறக்க வாழ்க!

இலந்தை