15
மரணம் என்றதுமே
ஒரு சாந்தம் வருகிறது
அமைதி நிலவுகிறது
தாய் மடியின் நிம்மதி வருகிறது
அள்ளியணைக்கும் கரங்கள் நீள்கின்றன
மரணத்தை விரோதியாகவே
பார்க்கும் கண்களுக்கு
மரணத்தைத் தாயாய் ஏற்க
மனம் வராமல் இருக்கலாம்
ஆனால்
துயரங்களின் முற்றுப்புள்ளியாய்
இருக்கும் மரணத்தை
வேறு எதைச் சொல்லி
அழைப்பது?
6 comments:
வாழ்க்கையின் தொடக்கமே
தாயின் மடியில்தான்.
மரணம் என்பதும்
தாயின் மடியென்றால்?
துயரங்களின் முற்றுப்புள்ளி
சுகங்களின் தொடக்கந்தான்
வாழ்க்கையும் ஒரு சக்கரந்தான்!
சௌந்தர்
வாழ்க்கையின் தொடக்கமே
தாயின் மடியில்தான்.
மரணம் என்பதும்
தாயின் மடியென்றால்?
ஆதியும் அந்தமும் ஒன்றுதான் என்பதற்கான சிறப்பான சான்றாகும்!
நல்ல கவிதை.
ஆனால் மரணம் இன்பத்துக்கும் அல்லவா முற்றுபுள்ளீ வைக்கிறது?பழுத்த இலை, பழுக்காத இலை, பிஞ்சு இலை என அனைத்துமே அல்லவா இந்த ஊழிகாற்றில் உதிர்கிறது?
நல்ல கவிதை.
ஆனால் மரணம் இன்பத்துக்கும் அல்லவா முற்றுபுள்ளீ வைக்கிறது?பழுத்த இலை, பழுக்காத இலை, பிஞ்சு இலை என அனைத்துமே அல்லவா இந்த ஊழிகாற்றில் உதிர்கிறது?
துன்பத்தின் முற்றுப்புள்ளியை இன்பம் என்று கொள்ளலாம்.
அமைதி சாந்தி நிச்சலனம் மோனம் என்றால் இன்பம்தானே!
இன்பத்தில் நிலைபெறும்போது பிஞ்சென்ன, பழுப்பென்ன, பழுக்காததென்ன?
மரணத்தை எதிர்நோக்கிய வாழ்க்கையில்தான் விடாமுயற்ச்சியாய்
முடிவெடுத்து சாதிக்கிறது மனம்.
உங்களின் வாழ்வு வெற்றிகரமாக அமைய வல்ல இறைவன் அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
Post a Comment