01 ஒரு தமிழ் நூல்தான் உலக முதல் இணையநூல் வெளியீடு கண்டு சரித்திரம் படைத்தது


வரலாற்றின்
வைர மணித் துளியில்
வாழ்கின்ற பேறு
வாய்த்திருக்கிறது நமக்கு

இந்திய மொழிகளில்
எந்த மொழிக்கும் இந்தப் பெருமை
இதுவரை சொந்தமில்லை

அயல் மொழிகள் முயல்வதற்குள்
ஆரம்பித்து விட்டோம் நாம்

சென்ற
தலைமுறைக்கு
இந்தச் சிறப்பு இல்லை
அடுத்த தலைமுறைக்கு
இதை நாம்
அனுமதிக்கப் போவதில்லை

திசைகளின் ஆசிரியர் மாலன்
உலகின் முதல் இணைய நூல் வெளியீட்டுவிழா தலைவர்

உலகில் முதன் முறையாக தமிழ் உலகம் என்ற இணைய குழுமம் பிப்ரவரி 8, 2004ல் துவங்கி ஒரு வார காலம் இணையவெளிப் பந்தலில் நடத்திய கவிஞர் புகாரியின் அன்புடன் இதயம் கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு

1. அழைப்பிதழும் வரவேற்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/1.html

2. தலைமையும் உபசரிப்பும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/2.html

3. வாழ்த்துரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/3.html

4. வெளியீடு ஆய்வுரைகள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/4.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/5.html

5. விமரிசனங்கள்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/6.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/7.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/8.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/9.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/11.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/12.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/13.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/14.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/10.html

6. ஏற்புரையும் நன்றியுரையும்
http://anbudanbuhari.blogspot.com/2008/02/15.html
http://anbudanbuhari.blogspot.com/2008/02/16.html


உந்திவிட்டாய் உலகத்தைச்
சாதனையில்
முந்திவிட்டாய் தமிழுலகே
பந்தியிட்டாய் இணையத்தில்
பேரொன்றைத்
தந்துவிட்டாய் தமிழுக்கே
வாழ்க வாழ்க

இந்தத்திருக் குழுமம்தான்
நான்முதலில்
வந்தேறிய தாய்க்குழுமம்
முந்தாநாள் வந்ததுபோல்
ஈரத்திலென்
பந்தவலைத் தொப்புள்கொடி
நன்றி நன்றி

அன்புடன் புகாரி

3 comments:

இலந்தை said...

இணையத்தில் முதல் தமிழ்நூல் வெளியிட்ட கவிஞருக்கு வாழ்த்துகள் . அந்தப்புத்தகத்தில் என் பெயரும் இருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.


இணையத்தில் முதல் கவியரங்கமும் கவிதைப் பட்டிமண்டபமும் , முழுக் கவிதை நூல் உருவாக்கமும்(வள்ளுவ மும்மணி மாலை) நிகழ்ந்த இடம் சந்த வசந்தக் குழுமம் என்பதையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

இலந்தை

கோவி.கண்ணன் said...

பாராட்டுகள் !

நகுபோலியன் said...
This comment has been removed by a blog administrator.