ஒபாமாவுக்கு நோபல் பரிசுஒபாமாவுக்கு அல்ல
அமெரிக்காவுக்கு
நோபல் பரிசு

செய்த
சாதனைக்காக அல்ல
செய்யக் கூடாது என்ற
போதனைக்காக

பாராட்டுவதற்காக அல்ல
மனிதநேயம்
வலியுறுத்துவதற்காக

போதும் ரத்த ஆறு
அதன் ஊற்றுக் குழி அடைக்க
பலி தருகிறோம்
உலக உன்னத நோபல் பரிசையே
என்ற அகிம்சை வதை

மனித மாமிச
உண்ணா விரதம் காக்க
உலக கௌரத்தையே
உணவாய்ச் சமைத்த விருந்து

இந்த அழகான திரிஷ்டிப் பூசணியைக்
கழுத்தில் மாட்டிவிட்டால்
நரபலி கேட்கும் சாத்தான்
வாக்குறுதி மீறி வெறிகொண்டாலும்
அடக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு

இனியும் ஓர் ஆயுதம்
அமெரிக்கக் கைகளில் முளைத்தால்
அது குடிக்கப்போவது
முதலில்
நோபல் பரிசின்
குறை உயிரைத்தான்

1 comment:

Vijay said...

//ஒபாமாவுக்கு அல்ல
அமெரிக்காவுக்கு
நோபல் பரிசு

செய்த
சாதனைக்காக அல்ல
செய்யக் கூடாது என்ற
போதனைக்காக//

அருமையாக உள்ளது புகாரி
வாழ்த்துக்கள்