உங்கள் மீது ஆணையாக
இனி ஒருநாளும் மாறவே மாட்டேன்
என்று குரல் பிளந்து கண்கள் கொட்டியபோதே
உன் மனம் மாறும் என்று
தெரியும் எனக்கு

நீ உண்மையானவள்
உறுதியானவளும் கூட
காலமும் கோலமும்
விசப்பற்களை
வாயுறையிலிருந்து உருவிக்கொண்டு
உன்னை உண்ணும்போது
நீ என்னதான் செய்வாய்

இருந்தும்
நான் மகிழ்வோடிருக்கிறேன்

இன்றுபோலவே இன்னொரு சத்தியத்தை
உன்னிடமிருந்து பெறும் நாளில்
சுவாசம் நசுங்கும் அணைப்பிலும்
நாளங்கள் பற்றும் முத்தத்திலும்
உயிர் வெடிக்கும் கலப்பிலும்
பிறப்போமே மீண்டும்
அதற்காக நீ பலகோடி முறை
மனம் மாறலாம்

நொடிகளில் நூறு ஜென்ம
வாழ்வென்பதைக் காட்டிலும்
வேறென்ன வேண்டிக்கிடக்கிறது

3 comments:

nila said...

//நொடிகளில் நூறு ஜென்ம
வாழ்வென்பதைக் காட்டிலும்
வேறென்ன வேண்டிக்கிடக்கிறது//

அழகு

சாந்தி said...

இன்றுபோலவே
இன்னொரு சத்தியத்தை
உன்னிடமிருந்து பெறும் நாளில்
சுவாசம் நசுங்கும் அணைப்பிலும்
நாளங்கள் பற்றும் முத்தத்திலும்
உயிர் வெடிக்கும் கலப்பிலும்
பிறப்போமே மீண்டும்

உணர்வுகள் புதிதாய் பிறக்க செய்யுதா?


அதற்காக நீ பலகோடி முறை
மனம் மாறலாம்

நொடிகளில் நூறு ஜென்ம
வாழ்வென்பதைக் காட்டிலும்
வேறென்ன வேண்டிக்கிடக்கிறது
சரிதான்..

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..

பூங்குழலி said...

வேறென்ன - காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

அழகான தலைப்பு ....புதிதாய் ஒன்றும் சொல்லப் போவதில்லை என்பதாக


நொடிகளில் நூறு ஜென்ம
வாழ்வென்பதைக் காட்டிலும்
வேறென்ன வேண்டிக்கிடக்கிறது

அருமை ..வேண்டிக்கிடக்கிறது என்ற சொல்லிலும் தலைப்பில் காணப்பட்ட அந்த செல்லச் சலிப்பு சேர்வதால்