பித்தான முத்தத்திற்கு
மெத்தையிட்டு வைத்ததுபோல்
மெத்து மெத்தென்ற கீழுதடு

கிழுதட்டின் முத்தத் தாகத்
தகிப்பின் கொதிப்பிற்கு
காற்று வீசும் சாமரமாய்
அடர்ந்த கருகரு
மீசையோடு மேலுதடு

நடுவில்
கவர்ச்சியான புதைகுழியில்
தேனூத்துப் பள்ளத்தாக்கில்
முத்தங்கள் ஏன்
தன் தித்திப்பு யுத்தத்தை
நாளும் பொழுதும்
நடத்திக்கொண்டே இருக்காது

Comments

ஆகா ஆகா - வழமை போல் பெண்ணின் உதடுகள் வர்ணிக்கப் படுகின்றன என நினைத்துப் படித்தால் கருகரு மீசையாம்

நல்ல கற்பனை

மெத்தென்ற கீழுதடு - சாமரம் வீசும் மீசைகளுடன் மேலுதடு

இனிய தேனூறும் பள்ளத்தாக்கு - முத்த்ப்போர் நாளும் நடக்க விருப்பமும் நல்வாழ்த்துகளும்
நல்லாயிருக்கு
புன்னகையரசன் said…
காதல் ரசம்...
சிவா said…
ஒரு முத்தத்திற்கு இவ்வளவு வர்ணனையா .. அருமை ஆசான்

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்