போ போ

என் கண்களின் ரத்த வெள்ளம்
மறைக்க மறைக்க

மீறிக்கொண்டு கூர்ந்து நோக்கும்
என் விழியின் பரிதாபத்தை
பயத்தோடும் பதட்டத்தோடும்
நிராகரித்து

தூரமாய் துயரமாய்
சிறகுகளில் கண்ணீர் கசிய
படபடத்து பறந்து சிறு துகளாய்
காற்றில் மிதந்து கரைந்து காணாமல்

போ போ

நீ திரும்பி வரும்போது
இந்த கூட்டுக்குள் என் உயிரின்
ஒரு துளியேனும் மீதம் இருந்தால்
அது என் ஜனனம்

4 comments:

சீதாம்மா said...

இப்படியும் புலப்பமா
நீ இனிமேல் காதலிக்காதே
உன்னைத் துடிக்க வைக்கும் காதல் செத்து ஒழியட்டும்

சீனா said...

அன்பின் புகாரி

காதல் காவியம் - இருவரும் பிரிய வேண்டிய நிலை - இருவருக்கும் விருப்பமில்லை பிரிவதில்

கண்களின் வெள்ளத்தினை மீறிய பரிதாபத்தை
பய்ந்து பதட்டத்தோடு நிராகரித்து சிறகுகளில் கண்ணீர் கசிய
காற்றில் கரைந்து போனவள்

திரும்ப வந்தால் - இவன் உயிர் மறு ஜென்மம எடுத்திருக்கும்

ம்ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா
--------------------------------

சாந்தி said...

நல்லாயிருக்கு.. ஆனாலும் இப்படியெல்லாம் உருகணுமா னு நினைப்பேன்...:)


கவிஞருக்கே உள்ள தனிமொழியோ ?

பூங்குழலி said...

என் விழியின் பரிதாபத்தை
பயத்தோடும் பதட்டத்தோடும்
நிராகரித்து தூரமாய் துயரமாய்
சிறகுகளில் கண்ணீர் கசிய
படபடத்து பறந்து சிறு துகளாய்
காற்றில் மிதந்து கரைந்து
காணாமல் போ போ

உறவு என்று ஒரு சொல்லிருந்தால் பிரிவு என்றொரு பொருளிருக்கும் ...