நேரங்கழித்து வந்தாலும்
கோபிக்கிறாய்
நேரத்தோடு வந்தாலும்
கோபிக்கிறாய்

பரிசு வாங்கித் தந்தாலும்
கோபிக்கிறாய்
பரிசு வாங்காமல் வந்தாலும்
கோபிக்கிறாய்

பாடச் சொன்னாலும்
கோபிக்கிறாய்
பாடச் சொல்லாவிட்டாலும்
கோபிக்கிறாய்

வரவா என்று கேட்டாலும்
கோபிக்கிறாய்
கேட்காவிட்டாலும்
கோபிக்கிறாய்

போகிறேன் என்றாலும்
கோபிக்கிறாய்
போகவில்லை என்றாலும்
கோபிக்கிறாய்

ஓ புரிந்துவிட்டது
நான் எப்போதும் உன்முன்
கெஞ்சிக் கெஞ்சியே
இழுத்து அணைத்து முத்தமிட்டு
செல்லம் செல்லம் என்று
கொஞ்சிக் கொஞ்சியே
இருக்க வேண்டும் அப்படித்தானே
அடடே சிரிப்பைப் பாரு

8 comments:

சகாதேவன் said...

நீங்க யார் கிட்டே பேசுறீங்க? கோபிகாவா?

வானம்பாடிகள் said...

/இழுத்து அணைத்து முத்தமிட்டு
செல்லம் செல்லம் என்று
கொஞ்சிக் கொஞ்சியே
இருக்க வேண்டும் அப்படித்தானே
அடடே சிரிப்பைப் பாரு/

:)). அருமை

அன்புடன் புகாரி said...

சகாதேவன்,

உங்கள் வருகைக்கு நன்றி. நான் பேசுவது: கோபிபழத்திடம்

வானம்பாடிகளே,

உங்களின் பின்னூட்டங்களால் நிறைகிறது என் கவிதைகள், நன்றி

க.பாலாசி said...

//இழுத்து அணைத்து முத்தமிட்டு
செல்லம் செல்லம் என்று
கொஞ்சிக் கொஞ்சியே
இருக்க வேண்டும் அப்படித்தானே
அடடே சிரிப்பைப் பாரு//

‘அது’க்கப்பறம் எத செய்யசொன்னாலும் கோபிக்க மாட்டாங்க....யூ கேன் ட்ரை....

நல்ல கவிதை நண்பரே...

அன்புடன் புகாரி said...

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி க.பாலாசி

சிவா said...

:)
நல்லா இருக்கு ஆசான்

கலகலப்ரியா said...

superb..!

cheena (சீனா) said...

அன்பின் புகாரி

எதைச் செய்தாலும் கோபமுகம் காட்டுவது - காதலில் இயற்கை - அது செயற்கையான செயல் என்று இருவருக்கும் தெரியும்.

கெஞ்சுவதும் கொஞ்சுவதும் இழுப்பதும் அணைப்பதும் இதழோடு இதழ் பதிப்பதும் சிரித்து மகிழ்வதும் இருவருக்குமே பிடித்த செயல்கள் தான். ஆனால் காதலி வெளிப்படையாகக் காட்டமாட்டாள்

நல்வாழ்த்துகல்