கடைந்தெடுத்த சொற்களால்
உனக்கொரு கவிதை எழுத வேண்டும்

எந்த சொற்களுக்கு அந்த
அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறதோ
ஒவ்வொன்றும் வெகு வனப்பாய்
வசீகரப்படுத்திக்கொண்டு
வரிசையில் நின்று தவிக்கின்றன

தேர்வாகாமல் தேம்பியழப்போகும்
எச்சொல் பற்றியும்
யாதொரு கவலையுமில்லை எனக்கு

வென்றுவரும் சொற்களை
எப்படி இணை வைப்பது
என் பேரழகிக்கு என்ற கவலையில்தான்
தலையோடு தகராறாய் தடுமாறிக்கிடக்கிறேன்

5 comments:

சாந்தி said...

>
> எந்த சொற்களுக்கு அந்த
> அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறதோ
> ஒவ்வொன்றும் வெகு வனப்பாய்
> வசீகரப்படுத்திக்கொண்டு
> வரிசையில் நின்று தவிக்கின்றன
>
> தேர்வாகாமல் தேம்பியழப்போகும்
> எச்சொல் பற்றியும்
> யாதொரு கவலையுமில்லை எனக்கு


:)) அட வார்த்தைகூட வருந்தப்போகுதா உங்க கவிதையை அலங்கரிக்காது.?

>
> வென்றுவரும் சொற்களை
> எப்படி இணை வைப்பது
> என் பேரழகிக்கு


அட அட.. அவ்வளவு உசத்தியா?

தஞ்சை மீரான் said...

//கடைந்தெடுத்த சொற்களால்

உனக்கொரு கவிதை எழுத வேண்டும் //

நல்லா எழுதுங்கள்....நாங்கள்தான் இருக்கிறோமே படிப்பதற்காக.

//எந்த சொற்களுக்கு அந்த
அதிர்ஷ்டம் வாய்த்திருக்கிறதோ
ஒவ்வொன்றும் வெகு வனப்பாய்
வசீகரப்படுத்திக்கொண்டு

வரிசையில் நின்று தவிக்கின்றன //

லஞ்சம் கொடுத்து முன்னுக்கு வரும் சொற்கள் பல உண்டு (மனிதர்களிடம் கற்றுக் கொண்டது)


//தேர்வாகாமல் தேம்பியழப்போகும்
எச்சொல் பற்றியும்

யாதொரு கவலையுமில்லை எனக்கு//

பாவம் உங்களது மொழி (ஆழ்ந்த அனுதாபங்கள் அழுது கொண்டிருக்கும் எழுத்துக்களுக்கு)


வென்றுவரும் சொற்களை
எப்படி இணை வைப்பது
என் பேரழகிக்கு என்ற கவலையில்தான்

தலையோடு தகராறாய் தடுமாறிக்கிடக்கிறேன் //

காதலியின் முன் பேசினால் அழகான வார்த்தையில்தான் பேச வேண்டுமென்று ஒருவன் நினைத்தானாம்.

இறுதிவரை அவனுக்கு அழகான வார்த்தை தெரியாமல் போகவே, இறுதியில் இறந்தும் போனானாம்.

அப்படி ஒரு காதலாய் இதுவும்.

பூங்குழலி said...

தேர்வாகாமல் தேம்பியழப்போகும்
எச்சொல் பற்றியும்
யாதொரு கவலையுமில்லை எனக்கு

அழகான வரிகள்

ஆயிஷா said...

கற்பனைக்கு எல்லையே இல்லை.
அழகான கவிதை.
இந்தக் கவிஞர்களை நினைக்கும் போதும் எனக்குள் ஒரு கேள்வி எழுந்து கொண்டே இருக்கும்......எப்படி இவர்களால் மட்டும் இப்படியெல்லாம் கற்பனை பண்ண முடிகின்றது. ஒரு வேளை இவர்களுக்கு ஏழாவது அறிவொன்று இருக்குமோ????????
அன்புடன் ஆயிஷா

Anonymous said...

உங்கள் படைப்புகளை பார்த்து பேச்சு மூச்சற்று நிற்க்கிறேன்.