என்னைக் கைக்குழந்தையாக்கி
உன் உயிரில் இட்டுத் தாலாட்டிய
குட்டித் தாயே

அதிகாலை
உன் முகம் பார்த்து கண் விழித்தேன்

பொழுதெல்லாம்
உன் புன்னனையால் பூ பூத்தேன்

முன்னிரவில்
பாலோடு பாலாடையாய் வரும்
உன் அக்கறையால் உறங்கினேன்

இரவெல்லாம் கனவில் வரும்
உன் கருணைமுக ஊர்வலங்களால்
நிம்மதிகொண்டேன்

வாழ்வுப் பாலையில்
நான் தனித்திருந்தேன் நீயோ
வசந்த சோலைகளை
என் காலடிக்கே கொண்டுவந்து குவித்தாய்

நீயில்லாமல் இன்றெல்லாம்
நெருப்பாய்த் தவிக்கிறேன்

நாளெல்லாம் கைகோத்து
என் வாழ்க்கை பயணம் அர்த்தமானது
என்று காட்டினாயே

அன்பே நீ எங்கே
நீ இல்லாமல் இனி நான் எங்கே

3 comments:

சிவா said...

வாழ்வுப் பாலையில்
நான் தனித்திருந்தேன் நீயோ
வசந்த சோலைகளை
என் காலடிக்கே கொண்டுவந்து குவித்தாய்

இந்த வரிகள் அருமை ஆசான்

vasu balaji said...

/நாளெல்லாம் கைகோத்து
என் வாழ்க்கை பயணம் அர்த்தமானது
என்று காட்டினாயே

அன்பே நீ எங்கே
நீ இல்லாமல் இனி நான் எங்கே/

அருமை.

சங்கரின் பனித்துளி நினைவுகள் said...

அனைத்தும் அற்புதமான வரிகள் வாழ்த்துக்கள் .


என்றும் உங்கள் அன்பிற்கினிய
சங்கர்
shankarp071@gmail.com
http://wwwrasigancom.blogspot.com/2009/09/blog-post_28.html